Home /News /national /

39,000 ரயில் சக்கரங்கள் தயாரிக்க சீன நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே ஒப்பந்தம்!

39,000 ரயில் சக்கரங்கள் தயாரிக்க சீன நிறுவனத்துடன் இந்தியன் ரயில்வே ஒப்பந்தம்!

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Indan Railway | ரயில் பெட்டிகளுக்கான 39,000 சக்கரங்களை சீன உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து வாங்க இந்திய ரயில்வே ஆர்டர் செய்துள்ளதாக மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களில் மட்டுமே இருந்து வரும் எல்எச்பி ரயில் பெட்டிகளை விரைவில் அனைத்து ரயில்களிலும் இணைக்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. அதிக இடவசதியும், அதிநவீன வசதிகளும் கொண்டு எல்எச்பி பெட்டிகள் குறிப்பிட்ட ரயில்களில் மட்டுமே இணைக்கப்பட்டிருந்தன. தற்போது ஏசி ரயில்கள் முதல் அனைத்து ரயில்களிலும் இந்த பெட்டிகளை இணைக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் எல்எச்பி பெட்டிகளுக்கான 39,000 சக்கரங்களை கொள்முதல் செய்வதற்காக சீன உற்பத்தியாளர் தைவான் உடன் இந்திய ரயில்வே செய்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாலா ராயின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், சீனாவைச் சேர்ந்த தையுன் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளார்.

    ALSO READ | கழுத்து வளைவு பாதிப்பால் அவதிப்பட்ட பாகிஸ்தான் சிறுமி, இலவசமாக சிகிச்சை அளிக்கும் டெல்லி மருத்துவர்
     இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறுகையில், "எல்எச்பி பெட்டிகளுக்கான 39,000 சக்கரங்களுக்கான கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை இந்திய ரயில்வே ஹாங்காங்கில் உள்ள சீன உற்பத்தியாளரான M/s தையுன் (Taiyyun) உடன் உலகளாவிய டெண்டர் முறையில் மேற்கொண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.


    ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பான பொருட்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.


    "முன்னதாக, எல்எச்பி பெட்டிகளுக்கான 30,000 சக்கரங்கள் தயாரிப்பதற்கான ஆர்டட் உக்ரைனில் உள்ள கேஎல்டபிள்யூ என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் இடையில் வெடித்த ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக கேஎல்டபிள்யூ நிறுவனம் ரயில் சக்கரங்களை சப்ளை செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டது. இதனால் உக்ரைன் நிறுவனத்திடம் இருந்து கைநழுவி கொள்முதல் ஒப்பந்தம் தற்போது சீன நிறுவனத்திற்கு எனவே உக்ரேனிய நிறுவனத்திற்கு முறையான கொள்முதல் உத்தரவை வழங்க முடியவில்லை" என்று மத்திய அமைச்சர் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

    ALSO READ | 2014-ல் இருந்து ஊட்டச்சத்துக் குறைபாடு குறைந்துள்ளது- அமைச்சர் ஸ்ம்ரிதி இராணி

    உக்ரைன் நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட கடிதத்தில் (LoA) கொடுக்கப்பட்ட சக்கரத்திற்கான விலையை விட சீன நிறுவனம் 1.68 சதவீதம் அதிக விலைக்கே ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சகம் மக்களவையில் கடந்த புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

    இந்தியா, சீனா இடையில் எல்லை தொடர்பான பதற்றங்கள் இருந்தபோதிலும், 2021-22ல் சீனாவிலிருந்து இந்தியாவிற்கான ஏற்றுமதி 45.51% உயர்ந்துள்ளது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கடந்த மாத தரவு சுட்டிக்காட்டுகிறது. இதே காலகட்டத்தில் சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 0.61% வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவில் இருந்து இரும்பு மற்றும் எஃகு பொருட்கள், உரங்கள், எண்ணெய் வித்துக்கள், பட்டு போன்ற பொருட்கள் மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: China, Indian Railways

    அடுத்த செய்தி