ஹோம் /நியூஸ் /இந்தியா /

வேலையில் ஒழுங்கீனம்..மூன்று நாள்களுக்கு ஒரு ரயில்வே ஊழியர் பணியில் இருந்து நீக்கம்!

வேலையில் ஒழுங்கீனம்..மூன்று நாள்களுக்கு ஒரு ரயில்வே ஊழியர் பணியில் இருந்து நீக்கம்!

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

கடந்த 16 மாதங்களில் ரயில்வே துறையில் சராசரியாக மூன்று நாளுக்கு ஒரு ஊழியர் என்ற அடிப்படையில் மொத்தம் 177 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  கடந்த ஒரு வருட காலமாக ஒழுங்கீனமான ஊழியர்களை கட்டம் கட்டி வேலை விட்டு ரயில்வே நிர்வாகம் அனுப்பி வருகிறது. நாட்டின் ரயில்வே அமைச்சராக 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் அஸ்வினி வைஷ்னவ் பொறுப்பேற்றார். இவர் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் ரயில்வேயில் பல்வேறு முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நிர்வாக ரீதியான நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு திட்ட செயல்பாடுகளை எளிமையாக்கும் பணிகளை அஸ்வினி வைஷ்னவ் தீவிரமாக முன்னெடுத்தார்.

  அத்துடன் பணியை ஒழுங்காக செயல்படாத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்நிலையில், ரயில்வே அமைச்சராக அஸ்வினி வைஷ்னவ் பொறுப்பேற்ற கடந்த 16 மாதங்களில் சராசரியாக மூன்று நாளுக்கு ஒரு ஊழியர் என்ற அடிப்படையில் மொத்தம் 177 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே ஒன்று பணியை ஒழுங்காக செய்யாத ஊழியர்கள் அல்லது பணியில் லஞ்சம் வாங்கியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் படிங்க: ''600 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு..'' அறிக்கை தந்த காவல்துறை.. ஷாக்கான நீதிமன்றம்!

  பணியில் இருந்து வெளியேறிய ஊழியர்களில் 139 பேர் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் என்றும் மீதம் உள்ள 38 பேர் வேலையை வீட்டு நீக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடந்த சில நாள்களுக்கு முன்னர் லஞ்சம் வாங்கிய இரு மூத்த அதிகாரிகளை ரயில்வே டிஸ்மிஸ் செய்துள்ளது. அதில் ஒரு ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். அதேபோல், மற்றொருவர் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர். இவர் ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கி மாட்டிக்கொண்டார்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indian Railways, Railway