ஹோம் /நியூஸ் /இந்தியா /

ராஜஸ்தானின் வரலாற்று பாரம்பரியத்தை நேரில் கண்டு ரசிக்க IRCTC-ன் ஸ்பெஷல் ஏர் டூர் பேக்கேஜ்.!

ராஜஸ்தானின் வரலாற்று பாரம்பரியத்தை நேரில் கண்டு ரசிக்க IRCTC-ன் ஸ்பெஷல் ஏர் டூர் பேக்கேஜ்.!

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

IRCTC air tour package to Rajasthan | இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ராஜஸ்தானுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்காக ஒரு சிறந்த ஏர் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மன்னர்களின் தேசம் என்றழைக்கப்படும் ராஜஸ்தானின் வரலாறு, பாரம்பரியம், இயற்கை அழகு மற்றும் அற்புதமான கலை-கலாச்சாரத்தை தெரிந்து கொள்ள மற்றும் நேரில் கண்டு ரசிக்க நீங்கள் நெடுநாட்களாக திட்டமிட்டு வந்தால் உங்களுக்கான நல்ல செய்தி இங்கு உள்ளது.

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) ராஜஸ்தானுக்குச் செல்ல விரும்பும் மக்களுக்காக ஒரு சிறந்த ஏர் டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்பெஷல் விமான பயண பேக்கேஜ் மூலம் ராஜஸ்தான் மாநிலத்தை மிகவும் உற்சாகமாக சுற்றி பார்க்கலாம். 8 இரவுகள் மற்றும் 9 பகல்களைக் கொண்ட இந்த ஸ்பெஷல் டூர் பேக்கேஜில் பிகானர், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர், உதய்பூர் போன்ற சிறந்த இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்க பயணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

ராஜஸ்தானின் ஒவ்வொரு நகரமும் முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் வண்ணமயமானது. வரலாற்று சிறப்பு மிக்க பழமையான கலைநயமிக்க அரண்மனைகள், பெருமைமிக்க இடங்கள், அழகான ஏரிகள் மற்றும் சாகச செயல்களில் ஈடுபடும் வகையிலான பாலைவனங்கள் உள்ளிட்ட பலவற்றை கண்டு மகிழலாம். இந்த ஏர் டூர் பேக்கேஜில் விமான டிக்கெட்டுகள், அனைத்து சுற்றுலா இடங்களுக்கும் ஏசி கோச் வண்டி, உணவு (காலை மற்றும் இரவு உணவு), டீலக்ஸ் ஹோட்டல்களில் தங்குவதற்கான வசதி மற்றும் முக்கிய நகரங்களுக்கு செல்லும் போது உள்ளூர் வழிகாட்டிகள் (லோக்கல் கைட்) உள்ளிட்டவற்றை ஒருவர் பெறுவார்கள்.

இந்த ஸ்பெஷல் ராஜஸ்தான் ஏர் டூர் பேக்கேஜின் விவரங்களை மக்களுக்குத் தெரியப்படுத்த ஐஆர்சிடிசி ட்விட்டரில் தகவல்களை ஷேர் செய்துள்ளது. அதில் " ராஜஸ்தானில் உள்ள சிறந்த கோட்டைகள், அரண்மனைகள், சுவையான உணவு வகைகள், ஏரிகள் மற்றும் சாகச பாலைவனங்கள் அனைத்தும் உங்களுக்காக காத்திருக்கின்றன. 9 பகல்கள் / 8 இரவுகளுக்கான இந்த IRCTC ஏர் டூர் பேக்கேஜில் ஒரு நபருக்கு ரூ.40,700 கட்டணம் வசூலிக்கப்படும். விவரங்களுக்கு இந்த வெப்சைட் லிங்கிற்கு bit.ly/3PCPegG விசிட் செய்யவும்" என்று கூறி இருக்கிறது.

Also Read : காஷ்மீருக்கு சுற்றுலா போகா ஆசையா! மலிவு விலையில் IRCTC வழங்கும் டூர் பேக்கேஜ்.!

விமான விவரங்கள்:

என்னவெல்லாம் பார்க்கலாம்.!

8-இரவுகள் & 9-பகல்களை கொண்ட இந்த பேக்கேஜை செலக்ட் செய்யும் பயணிகள் பிகானேர், ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர், உதய்பூர் போன்ற இடங்களுக்கு செல்ல முடியும். இங்கு, பயணிகள் ஹவா மஹால், ஜந்தர் மந்தர், சிட்டி பேலஸ், அமர் கோட்டை, ஜெய்கர் கோட்டை, பிர்லா கோயில், ஜல்மஹால், ஒட்டக வளர்ப்பு பண்ணை மற்றும் தேஷ்னோக் (கர்னி மாதா) கோயில், ஜுனகர் கோட்டை உள்ளிட்ட பல இடங்களை பார்வையிடலாம். ஆர்வமுள்ள பயணிகள் IRCTC-யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று இந்த ஸ்பெஷல் ராயல் ராஜஸ்தான் ஏர் டூர் பேக்கேஜை புக் செய்து கொள்ளலாம்.

Published by:Selvi M
First published:

Tags: Indian Railways, IRCTC, Rajasthan, Tourism