ஹோம் /நியூஸ் /இந்தியா /

முன்பதிவில்லா டிக்கெட் புக்கிங் - UTS செயலியில் மாற்றம்.. ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

முன்பதிவில்லா டிக்கெட் புக்கிங் - UTS செயலியில் மாற்றம்.. ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு

இந்திய ரயில்வே

இந்திய ரயில்வே

யுடிஎஸ் (UTS) என்ற மொபைல் செயலி மூலம் புக் செய்வதில் முக்கிய மாற்றத்தை இந்திய ரயில்வே கொண்டுவந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  இந்திய ரயில்வேயில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் புக் செய்ய முடியும். அதேபோல், முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் யுடிஎஸ் (UTS) என்ற மொபைல் செயலி மூலம் புக் செய்துகொள்ளலாம். இந்த யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகளாக புறநகர் ரயில்களின் டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட், சீசன் டிக்கெட்கள் ஆகியவற்றை இந்த யுடிஎஸ் செயலி மூலம் புக் செய்ய முடியும்.

  பொதுவாக சென்னை புறநகர் ரயில் சேவை போல அன்றாடம் அதிகம் மக்கள் பயணிக்கும் ரயில் சேவைகளில் டிக்கெட் கவுண்டர்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் கூட்டத்தை தவிர்க்க இந்த செயலி உதவி செய்கிறது. இதன் மூலம் பயணிகளின் நேரம் வெகுவாக மிச்சமாகிறது.இந்த செயலி மூலம் பயணி ஒருவர் புற நகர் ரயில் நிலையத்தில் இருந்து 2 கிமீ சுற்று வட்டார தூரத்தில் இருந்துகொண்டு டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம்.

  புறநகர் அல்லாத பகுதிகளில் ஒரு ரயில் நிலையத்தில் இருந்து 5 கிமீ தூரத்தில் இருந்து கொண்டு முன்பதிவில்லா  டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம். இந்நிலையில், முன்பதிவு செய்யும் பயணிகள் இருப்பிட தொலைவை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலம் இருந்து வருகிறது. இதை நிறைவேற்றும் விதமாக இந்திய ரயில்வே புக்கிங் தூரத்தை உயர்த்தியுள்ளது.

  இதையும் படிங்க: 2023க்குள் 100% ரயில் பாதையை மின்மயமாக்க இலக்கு..

  அதன்படி, புறநகர் பகுதிகளில் 5 கிமீ தூரத்தில் இருந்து கொண்டும், புறநகர் அல்லாத பகுதிகளில் 20 கிமீ தூரத்தில் இருந்து கொண்டும் பயணிகள் இனி யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட்டை புக் செய்துகொள்ளலாம். இது தொடர்பான அறிவுறுத்தலை அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Indian Railways, Train ticket