Home /News /national /

IRCTC ட்ரிக்ஸ் : தட்கல் டிக்கெட்டை இப்படி புக் செய்தால் உடனே கன்ஃபார்ம் டிக்கெட்டாக மாறும்

IRCTC ட்ரிக்ஸ் : தட்கல் டிக்கெட்டை இப்படி புக் செய்தால் உடனே கன்ஃபார்ம் டிக்கெட்டாக மாறும்

ஐஆர்சிடிசி

ஐஆர்சிடிசி

Indian Railways Tatkal ticket | தட்கால் டிக்கெட் ஒரு சில நிமிடங்களில் புக் ஆகிவிடும். எனவே நீங்கள் 10 நொடிகள் தாமதித்தால் கூட உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படாது. தட்கல் டிக்கெட்டில் கன்ஃபாரம் டிக்கெட்டை புக் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ரயிலில் நீண்ட பயணங்களுக்கு முன்பதிவு செய்வதற்கு 3 - 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் விருப்பம் இருக்கிறது. IRCTC வலைத்தளத்தின் வழியாக உங்கள் கணக்கில் லாகின் செய்து நீங்களே டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். அல்லது முன்பதிவு செய்யும் வசதி இருக்கும் ரயில் நிலையங்களில் அதாவது டிக்கெட் ரிசர்வேஷன் சென்டர் இருக்கும் ரயில் நிலையங்களில் சென்று நீங்கள் படிவத்தை நிரப்பி ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

முன்கூட்டியே திட்டமிடும் பயணிகளுக்கு இந்த தேர்வு இருப்பதைப் போலவே உடனடி பயணம் செய்ய வேண்டும், உடனடியாக சென்னையிலிருந்து டெல்லி செல்ல வேண்டும் அல்லது ஹைதராபாத் செல்ல வேண்டும் என்ற சூழலில், தட்கல் டிக்கெட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டது. நீங்கள் நாளை ஒரு ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் அதற்கானதற்கான டிக்கெட்டை இன்று புக் செய்துகொள்ளலாம். நாளைக்கு நீங்கள் பயணம் செல்லும் ரயிலுக்கான டிக்கெட் புக்கிங் இன்று தொடங்கும்.

ஒவ்வொரு ரயிலுக்கும் தட்கால் டிக்கெட் கோட்டா என்று குறிப்பிட்ட எண்ணிக்கையில், அனைத்து வகுப்புகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும். நீங்கள் மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டியில் பயணம் செய்ய விரும்பினாலும் சரி, அல்லது ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்ய விரும்பினாலும் சரி, ரயிலில் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தட்கால் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டு இருக்கும்.



தட்கல் டிக்கெட் ஒரு சில நிமிடங்களில் புக் ஆகிவிடும். எனவே நீங்கள் 10 நொடிகள் தாமதித்தால் கூட உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்படாது. ரயில் கிளம்பும் நேரம் வரை ரிசர்வேஷன் சார்ட்டில் உங்கள் பெயர் வந்திருக்கிறதா என்பது பதற்றத்தை ஏற்படுத்தும்

Also Read : பிரமிப்பை ஏற்படுத்தும் இந்தியாவின் தனித்துவமான இடங்கள் பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள் இங்கே.!

தட்கல் டிக்கெட்டில் கன்ஃபாரம் டிக்கெட்டை புக் செய்வது எப்படி என்று இங்கே பார்க்கலாம்.

எந்த வகுப்பில் பயணம் செய்யப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்துகொள்ளவும். ஏசி வகுப்புக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு தினமும் காலை 10:00 மணிக்கு தொடங்கும். ஸ்லீப்பர் கோச்சுக்கான தட்கால் முன்பதிவு 11 மணிக்கு தொடங்கும். எனவே நீங்கள் அந்த நேரத்தை சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

Also Read : ஒரு வாரம் தென்னிந்தியாவில் ஜாலியா டூர் போகலாம்... IRCTC-ன் சூப்பரான பேக்கேஜ்

ஐஆர்சிடிசி வலைத்தளத்தில் My Profile என்ற பிரிவுக்கு சென்று ஒரு மாஸ்டர் லிஸ்ட் என்பதை தயார் செய்து கொள்ளுங்கள். மாஸ்டர் லிஸ்ட்டில் உங்களுடைய வயது, ஆதார் எண் மற்றும் அதில் கூறப்பட்டிருக்கும் அனைத்து தகவல்களையும் உள்ளிட வேண்டும். அதே போல, டிக்கெட்டுக்கான பேமெண்ட் விவரங்களையும் முன்பே சேர்த்துக் கொள்ளவும்.



டிக்கெட் புக் செய்வதற்கு முன்பு நீங்கள் எந்த ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும், அந்த ரயிலின் எண், நீங்கள் புறப்படும் இடம் செல்லும் இடம் ஆகியவற்றுக்கான ஸ்டேஷன் கோடுகள் என்று எல்லாவற்றையும் தயாராக வைத்து கொள்ளுங்கள்.

Also Read : உலகின் மிக நீளமான ரயில் பயணம்... 9,289 கிலோமீட்டரில் 3 நாடுகளை பார்க்கலாம்...

தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு உங்கள் IRCTC கணக்கில் லாகின் செய்யுங்கள். நீங்கள் செல்ல விரும்பும் ரயில் புறப்படும் இடம் மற்றும் சென்று சேரும் இடம் ஆகிய விவரங்களை உள்ளிடுங்கள்.

ஏற்கனவே மாஸ்டர் லிஸ்ட்டில் உங்களுடைய பெயர் மற்றும் இதர விவரங்களை நீங்கள் சேர்த்துள்ளதால், அதை தனியாக உள்ளிட்ட வேண்டாம். மாஸ்டர் லிஸ்ட்டில் இருந்து பேசஞ்சர் லிஸ்டில் உங்கள் பெயர் இருக்கும் வரிசையை தேர்வு செய்தால் அந்த விவரங்கள் சேர்ந்துவிடும்.

Also Read : கேரளாவில் கட்டாயம் ரசிக்க வேண்டிய 10 விஷயங்கள்.!

அதேபோல பேமண்ட் செய்யும் பிரிவுக்கு செல்லும் போது, நீங்கள் ஏற்கனவே சேர்த்திருக்கும் கட்டண விருப்பத்தைத் தேர்வு செய்தால், ஓரிரு நிமிடங்களை மிச்சம் செய்து டிக்கெட்டை கன்ஃபார்ம் டிக்கெட்டாக புக் செய்ய முடியும்.
Published by:Selvi M
First published:

Tags: Indian Railways, IRCTC, Train Ticket Reservation

அடுத்த செய்தி