பெரும்பாலான இந்திய மக்களுக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் சௌகரியமான ஒன்றாக இருந்து வருகிறது. பயணிகளின் தேர்வுக்கேற்ப டிக்கெட்டின் விலையை பொறுத்து பல்வேறு விதமான வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் விரும்பும் பெர்த், விரும்பிய இருக்கைகள் ஆகியவற்றை பயணிகள் தேர்வு செய்து கொள்ள முடியும். ஆனால் சமீபத்தில் அதிகரித்து வரும் பல்வேறு புகார்களின் காரணமாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு புதிய விதிமுறைகளை விதித்துள்ளது இந்திய ரயில்வே.
இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் ரிசர்வ்ட் பெட்டிகளில் பயணம் செய்யும் மக்கள் இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணி வரை தான் உறங்க வேண்டும் என்றும் மற்ற நேரங்களில் மற்றவர்களுடன் இருக்கையை பகிர்ந்து கொண்டு, உட்கார்ந்து கொண்டு பயணம் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது. பல்வேறு மக்கள் ரயிலில் ஏறிய உடனே உறங்குவதற்கு விருப்பப்படுவதால் உறக்கத்திற்கான நேரம் ஒரு மணி நேரம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விதிமுறை விதித்ததற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது. பல்வேறு சூழ்நிலைகளில் மிடில் பெர்த்தில் உள்ள நபர்கள் படுக்கையில் இருந்து எழுந்து கொள்ள தகராறு செய்வதாக பல்வேறு புகார்கள் பதிவாகியுள்ளன. இதனால் கீழ் பெர்த்தில் இருக்கும் பிரயாணிகளுக்கு பெரும் சங்கடம் விளைவிப்பதாக உள்ளது. இதனால்தான் தூங்குவதற்கான குறிப்பிட்ட நேரத்தை விதித்துள்ளது இந்திய ரயில்வே.
இது மட்டுமில்லாமல் அதிக சத்தத்துடன் இசை கேட்பதும், சத்தமாக செல்போனில் பேசுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. இதைப் பற்றிய பல்வேறு புகார்களும் இந்திய ரயில்வேயிற்கு வந்த வண்ணம் இருந்தன. பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் இவை அனைத்தும் இருப்பதால் இது போன்ற செயல்கள் தடை செய்யப்பட்டுள்ளது இந்திய ரயில்வே. மேலும் டிக்கெட் பரிசோதகர்கள் உட்பட ரயிலில் பணிபுரியும் மற்ற அனைவருமே பொதுமக்களுக்கு இடையூறு கொடுக்காத வண்ணம் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது.
Also Read : ரயிலில் பயணமா..? கவலை வேண்டாம்... இனி வாட்ஸ்அப் போதும்
கூடுதலாக ரயிலில் உள்ள அவசரகால சங்கிலியை பற்றிய சில தகவல்களையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சரியான எந்த காரணமும் இல்லாமல் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்துவது என்பது குற்றமாகும். ரயிலில் உள்ள சங்கிலியானது அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது.
Also Read : இனி பாஸ்வேர்ட் கிடையாது… ஒன்லி பாஸ் கீ தான்… கூகுள் அதிரடி..
உங்களது குழந்தை, செல்லப்பிராணிகள், முதியவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் ஆகிய யாரேனும் ரயிலை தவறவிட்டாலும் அல்லது எதிர்பாராத விபத்துக்கள் ஏதேனும் ஏற்பட்டாலும் அல்லது வேறு ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்பட்டாலேயன்றி மற்ற சமயங்களில் ரயிலில் உள்ள சங்கிலியை இழுப்பது குற்றத்திற்குரிய செயலாகும். இதற்காக சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை விதிப்பதற்கும் சட்டத்தில் இடம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: India, Indian Railways, Tamil News