ஹோம் /நியூஸ் /இந்தியா /

அடுத்த ஆண்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே அறிவிப்பு!

அடுத்த ஆண்டுக்குள் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் - ரயில்வே அறிவிப்பு!

ரயில்

ரயில்

ஒவ்வொரு புதிய வந்தே பாரத் ரயிலை தயாரிக்கும் போதும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்டிற்கான பணி

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  அடுத்த ஆண்டு சுகந்திர தின கொண்டாட்டத்திற்குள் நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

  சென்னையில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையான ஐசிஎஃப்-யில் (இன்டக்ரல் கோச் பேக்டரி) உள்நாட்டு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட அதிநவீன விரைவு ரயில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில்கள் டெல்லி - வாரணாசி இடையே முதற்கட்டமாக இயக்கப்பட்டு வருகின்றன.

  இந்த ரயில் சேவைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், இதனை நாடு முழுவதும் பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்க மத்திய ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டு வருகிறது.

  இதற்காக சென்னை பெரம்பூரில் உள்ள இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று சென்னை ஐசிஎஃப்-யில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில்களை மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.

  ஆய்வுக்குப் பிறகு, அவர் அவற்றை ரயில்வேயின் R&D பிரிவான லக்னோவைச் சேர்ந்த ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலை அமைப்பிடம் (RDSO) ஒப்படைத்துள்ளார்.

  வந்தே பாரத் ரயில்கள் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலை அமைப்பு அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு, அதனை இயக்குவதற்கான பாதுகாப்பு அனுமதி வழங்கப்படும்.

  அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 75 புதிய வந்தே பாரத் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. எனவே, ஒவ்வொரு மாதமும் ஏழு முதல் எட்டு ரயில்களை தயாரிக்க வேண்டும் என ஐசிஎஃப் தொழிலாளர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் சென்னை தொழிற்சாலையில் ரயில்களை தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது, மத்திய ரயில்வே அமைச்சகம் நிர்ணயித்த இலக்கை அடுத்த ஆண்டுக்குள் அடைய முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

  ஒவ்வொரு புதிய வந்தே பாரத் ரயிலை தயாரிக்கும் போதும் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்டிற்கான பணிகளை மேற்கொள்வதால் ரயில்களுக்கான செலவு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  அதாவது 16 பெட்டிகளைக் கொண்ட வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஆரம்பத்தில் 106 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 110 கோடி முதல் 120 கோடி வரை செலவினங்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு மாதமும் 10 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.

  கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை மற்றும் ரேபரேலியில் உள்ள நவீன ரயில் பெட்டிகள் தொழிற்சாலைகளும் அடுத்த 3 ஆண்டுகளில் 400 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் இலக்குடன் உற்பத்தி பணியில் ஈடுபட்டு வருகின்றன.

  Read More: திருப்பதி திருமலைக்கு 24 ஆண்டுகளாக திரை சீலைகள் தைத்து வரும் தையல்காரர்

  மேக் இன் இந்தியா முறையில் வந்தே பாரத் தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டது, ஆனால் பல கோடி ரூபாய் முதலீடு செய்தும் வந்தே பாரத் எதிர்பார்த்த வேகத்தை பெறாதது இந்திய மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: ICF, Indian Railways, Passengers, Train