Home /News /national /

இந்தியன் ரயில்வே: ரயிலில் பயணிக்கும் போது ஆர்டர் செய்யும் உணவுகள் விலையேற்றம்!

இந்தியன் ரயில்வே: ரயிலில் பயணிக்கும் போது ஆர்டர் செய்யும் உணவுகள் விலையேற்றம்!

ரயில் பெட்டிகள்

ரயில் பெட்டிகள்

Indian Railway Service Charges Hike | ரயிலில் சப்ளை செய்யும் உணவுகளை ஆர்டர் செய்யும் போது, கூடுதலாக ஆன் போர்டிங் கட்டணம் செலுத்த வேண்டும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே வசூலிக்கும் கட்டணத்தின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதைப்பற்றிய முழு விவரங்கள் இங்கே.

மேலும் படிக்கவும் ...
    tசயஅதிவிரைவு மற்றும் நீண்ட தூரம் இயக்கப்படும் ரயில்களான ராஜ்தானி, சதாப்தி, தேஜஸ், வந்தே பாரத் உள்ளிட்ட ரயில்களில் கேட்டரிங் சேவைகள் விலை ஏற்றப்பட்டுள்ளது. மிகவும் வித்தியாசமான விதிமுறையாக, ரயிலில் பயணிக்கும் போது ரயிலில் சப்ளை செய்யும் உணவுகளை ஆர்டர் செய்யும் போது, கூடுதலாக ஆன் போர்டிங் கட்டணம் செலுத்த வேண்டும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.

    சில நாட்களுக்கு முன், ஒரு கப் தேநீருக்கான சேவை கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்பட்டது, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு, தேநீர் பில்லின் புகைப்படம் வைரலானது. இவ்வளவு விலையா என்று பலரும் விமர்சித்த நிலையில், IRCTC இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. வந்தே பாரத், சதாப்தி, தேஜஸ், துரந்தோ மற்றும் பிற அதிவேக ரயில்களில், இந்த புதிய ஆன்போர்டிங் கேட்டரிங் சேவைக் கட்டணங்கள் பொருந்தும். அதாவது சேவைக் கட்டணங்கள் தான் உயர்த்தப்பட்டுள்ளது, உணவுகளுக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை. இருப்பினும், ஒட்டுமொத்த உணவின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. விலையேற்றப்பட்ட உணவுப் பொருட்களுக்கு, இந்திய ரயில்வே வசூலிக்கும் கட்டணத்தின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதைப்பற்றிய முழு விவரங்கள் இங்கே.

    டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே உணவுக்கும் சேர்த்து கட்டணம் செலுத்தும் வசதி உள்ள ரயில்களில் விலையேற்றம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    காலை தேநீர்: முதல் வகுப்பு மற்றும் எகனாமிக் வகுப்பில் பயணிக்கும் பயணிகளின் ப்ரீபெய்ட் மற்றும் ஆன்போர்டு உணவாக, காலை தேநீரின் விலை ரூ.35 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏசி மற்றும் சேர் கார் கம்பார்ட்மென்ட் பயணிகளுக்காண தேநீரின் விலை ரூ.20.

    காலை உணவு: முதல் ஏசியில் 140 ரூபாய்க்கு ப்ரீபெய்டு காலை உணவு கிடைக்கும். ஆனால், டிக்கெட் முன்பதிவின் போது, உணவுக்கான கட்டணம் செலுத்தவில்லை என்றால், ரயிலில் ஆர்டர் செய்யும் போது சப்ளை செய்யப்படும் ஆன்போர்டு காலை உணவின் விலை ரூ. 190 ஆகும்.

    இரண்டாவது மற்றும் மூன்றாவது ஏசி கோச்சில் ப்ரீபெய்டு மற்றும் ஆன் போர்டு காலை உணவின் விலை ரூ.155.

    மதிய/இரவு உணவு: முதல் ஏசி மற்றும் எகானமி வகுப்பில் ப்ரீபெய்டு மதிய-இரவு உணவுக்கான விலை ரூ.245. ஆன் போர்டில் மதியம்/இரவு உணவை ஆர்டர் செய்யும் போது, அதற்கு ரூ.295 செலுத்த வேண்டும்.

    இரண்டாவது ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் சேர் காரில் பிரீபெய்டு உணவுக்கு ரூ.185 மற்றும் ஆன் போர்டு ஆர்டருக்கு ரூ.235 செலுத்த வேண்டும்.

    மாலை தேனீர் மற்றும் ஸ்நாக்ஸ்: முதல் ஏசி மற்றும் எகானமி வகுப்பில் ப்ரீபெய்டு தேநீர் மற்றும் தின்பண்டங்களின் விலை ரூ.140. ஆன் போர்டு ஆர்டர் செய்யும் போது, அதற்கு ரூ.190 செலுத்த வேண்டும்.

    இரண்டாவது ஏசி, மூன்றாம் ஏசி மற்றும் சேர் காரில் பிரீபெய்டு உணவுக்கு ரூ.90 மற்றும் ஆன் போர்டு ஆர்டருக்கு ரூ.140 செலுத்த வேண்டும்.

    தோராயமாகப் பார்க்கும் போது, ப்ரீபெய்டு உணவுகளை விட, ஆன்போர்டு உணவுகள் குறைந்தபட்சம் 50 ரூபாய் அதிகமாக உள்ளது.

    Read More : ரயிலில் தனியாகப் பயணிக்கும் பெண்கள் கண்டிப்பாக இந்த சட்டங்களை தெரிந்துக்கொள்ளுங்கள்!

    அது மட்டுமில்லாமல். தேநீர் விலைக்கான சேவை கட்டணத்தால் மிகப்பெரிய நெருக்கடிய எதிர்கொண்ட IRCTC, ஒரு ஸ்டாண்டர்டு விலையை நிர்ணயித்துள்ளது. ரயிலில் வழங்கப்படும் காலை மற்றும் மாலை தேநீர் விலை ரூ.30 என்றும், இந்த ரயில்கள் தாமதமாக வந்தால், ரூ. 8க்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Elakiya J
    First published:

    Tags: Food, Indian Railways, Railway

    அடுத்த செய்தி