செப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல் - இந்திய ரயில்வே விளக்கம்

செப்டம்பர் 30ம் தேதி வரை ரயில் சேவை ரத்து என்பது தவறான தகவல் - இந்திய ரயில்வே விளக்கம்
கோப்பு படம்
  • Share this:
இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதிவரை ரயில்சேவையை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி தவறானது என்று இந்திய ரயில்வே விளக்கமளித்துள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்துவருகிறது. கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையில் ஒரு பகுதியாக மார்ச் மாதம் முதல் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊரில் கொண்டு சேர்க்கும் நடவடிக்கையாக சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. இடையில், ஒரு சில வாரங்களுக்கு குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்பட்டன.

பின்னர், கொரோனா பாதிப்பு அதிகமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் ரயில்சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் 12-ம் தேதிவரை ரயில்சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்திருந்தது அமலில் இருந்துவருகிறது. இந்தநிலையில், செப்டம்பர் 30-ம் தேதிவரை ரயில்சேவை நிறுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகின.

இந்த செய்தியை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ரயில்வே ட்விட்டர் பதிவில், ‘செப்டம்பர் 30-ம் தேதிவரை ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இது உண்மையல்ல. புதிய அறிவிப்பு எதுவும் ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை. சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளது.
First published: August 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading