ஹோம் /நியூஸ் /இந்தியா /

நவராத்திரி ஸ்பெஷல் | சுவையான விரத உணவை அறிமுகப்படுத்திய ஐஆர்சிடிசி!

நவராத்திரி ஸ்பெஷல் | சுவையான விரத உணவை அறிமுகப்படுத்திய ஐஆர்சிடிசி!

நவராத்திரி ஸ்பெஷல்

நவராத்திரி ஸ்பெஷல்

Indian Railways Navaratri menu | இ-கேட்டரிங் வசதிகளை வழங்கும் IRCTC ரயில்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் இந்த சிறப்புத் தாளியின் ஆரம்ப விலை ரூ.99 ஆகும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, இந்துக்கள் தங்களது வீடுகளில் 9 நாட்கள் கொலு வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். தற்போது நவராத்திரி விழா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நாட்களில் துர்கை அம்மனின் அருளைப் பெற விரதம் இருப்பதால், வெளி உணவுகளை உட்கொள்ள மாட்டார்கள். இருப்பினும் விரதம் மேற்கொண்டு வரும் மக்கள், திடீரென பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் அதனை புறக்கணிக்க முடியாது. அப்படிப்பட்ட இக்காட்டான சூழ்நிலையில் பயணிப்பவர்களுக்காகவே இந்தியன் ரயில்வே விரத உணவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியன் ரயில்வே செப்டம்பர் 25ம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மங்களகரமான நவராத்திரி திருவிழாவின் போது, ​​இந்தியன் ரயில்வே உங்கள் விரதத்தைக் கடைப்பிடிக்க உதவும் விதமாக 26.09.22 முதல் 05.10.22 வரை சிறப்பு மெனுவை உங்களுக்கு வழங்குகிறது. உங்களின் ரயில் பயணத்திற்கான நவராத்திரி உணவு வகைகளை ‘Food on Track’ செயலியில் இருந்து ஆர்டர் செய்யவும், http://ecatering.irctc.co.in ஐப் பார்வையிடவும் அல்லது 1323 என்ற எண்ணில் அழைக்கவும்” என ட்வீட் செய்துள்ளது.

நவராத்திரி ஸ்பெஷல் விரத சாப்பாட்டு மெனுவில் ஆலு சாப், ஐவ்வரிசி கட்லெட், சபுதானா டிக்கி சபுதானா கிச்சடி, கோஃப்தா கறி மற்றும் பனீர் மக்மாலி, பராத்தாக்கள், ஜவ்வரிசி டிக்கி, ஐவ்வரி கிச்சடி, அடை பாயாசம் உள்ளிட்டவை அடங்கும். விரதம் இருக்கும் பக்தர்களுக்கு சாதாரண உப்பிற்கு பதிலாக இந்து உப்பில் செய்த உணவு கொடுக்கப்படும், அத்துடன் வெங்காயம் மற்றும் பூண்டு இல்லாத சுத்தமான விரத சாப்பாடு வேண்டும் என்றாலும் அதுவும் கிடைக்கும்.

இ-கேட்டரிங் வசதிகளை வழங்கும் IRCTC ரயில்களில் மட்டுமே வழங்கப்பட்டு வரும் இந்த சிறப்புத் தாளியின் ஆரம்ப விலை ரூ.99 ஆகும். முதற்கட்டமாக கிழக்கு ரயில்வே பகுதிகளில் உள்ள 400 ரயில்வே நிலையங்களைக் கடக்கும் ரயில்வே பயணிகளுக்கு இந்த மெனுக்களை ரயில்வேயில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்தாலே போதும், பயணி இருக்கக்கூடிய ரயில் பெட்டி தேடி சிறப்பு உணவு வந்துவிடும்.

Also Read : இனி இந்த ரயில்கள் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இலவச உணவு - இந்தியன் ரயில்வே முடிவு

உணவை ஆர்டர் செய்வதில் மூன்று படிகள் உள்ளன. முதலில் பயணிகள் உணவை எங்கு பெற வேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும். பயணிகள் தங்களது PNR எண்ணை உள்ளிட்டு பயணத்திற்கு அருகிலுள்ள உணவகங்களைத் தேடி முடிவு செய்யலாம். அதன் பின்னர் அவர்களுக்குத் தேவையான உணவை தேர்வு செய்ய வேண்டும். இறுதியாக ஆன்லைனில் பணம் செலுத்தப்போகிறீர்களா அல்லது கேஷ் ஆன் டெலிவரியா என்பதை தேர்ந்தெடுத்தாலே போதும் குறிப்பிட்ட பயணியின் இருக்கைக்கே யாரும் பயன்படுத்தாத, யார் கையும் படாத தட்டில் வந்து சேரும்.

Also Read : ரயில் பயணங்களில் இனி வாட்ஸ்அப் மூலம் உணவு ஆர்டர் செய்யலாம்... வழிமுறை இதோ...!?

ஆன்மீகத்தையும், சுற்றுலாவையும் இணைக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வரும் இந்தியன் ரயில்வே கடந்த ஆண்டே நவராத்திரி விரத உணவுகளை அறிமுகப்படுத்தியது. குறிப்பாக வடமாநிலங்களில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம் என்பதால், ரயில்வேயின் இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Published by:Selvi M
First published:

Tags: Food, Indian Railways, IRCTC, Navaratri