இரயில் பயணத்தின் போது எடுத்து கொண்டு வரப்படும் லக்கேஜ் பற்றிய விதிமுறைகளை சமீபத்தில் இந்திய ரயில்வே வெளியிட்டது. இது ஏற்கனவே இருந்த விதிமுறைகளாக இருந்தாலும், பலரும் இது குறித்து அறிந்திருப்பதில்லை. அதன்படி, தற்போது அறிவித்துள்ள விதிமுறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய ரயில்வே தெளிவுபடுத்தியுள்ளதால் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக தான் இது இருக்கும். திடீரென்று இது குறித்த செய்திகள் பல தளங்களில் வலம் வருவதற்கு காரணம், சில தவறான செய்திகள் பரப்பப்பட்டு வந்தது தான்.
அதன்படி, “ரயிலில் பயணம் செய்யும்போது எடுத்து செல்லப்படும் லக்கேஜ் பற்றிய விதிமுறைகள் சமீபத்தில் மாற்றப்பட்டதாக சில சமூக ஊடகங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் வெளியான செய்தி தவறானது என்று ரயில்வே துறை கூறியுள்ளது. சமீப காலங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும், தற்போதுள்ள லக்கேஜ் கொள்கை 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமலில் உள்ளது என்றும் இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது” என்று ரயில்வே அமைச்சகம் ட்வீட் செய்துள்ளது. மேலும், சமீப காலமாக கூடுதலாக எடுத்து கொண்டு வரப்படும் பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்க போவதாக ரயில்வே துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, பயணிகள் தாங்கள் பயணிக்கும் வகுப்பைப் பொறுத்து 40 கிலோ முதல் 70 கிலோ வரை எடையுள்ள லக்கேஜ்களை ரயில் பெட்டியில் எடுத்து செல்லலாம். கூடுதல் பொருட்கள் இருந்தால், அவற்றிற்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று சமீபத்திய அறிக்கைகள் கூறுகின்றன. ரயில்வே அமைச்சகம் மே 29ம் தேதி பதிவிட்ட ட்வீட்டிற்கு பிறகு தான் இதுகுறித்த சில குழப்பங்கள் தொடங்கியது. அந்த ட்வீட்டில் " ரயிலில் பயணம் செய்யும் போது அதிகப்படியான லக்கேஜ்களை எடுத்து செல்ல வேண்டாம். உங்களிடம் அதிகப்படியான சாமான்கள் இருந்தால், பார்சல் அலுவலகத்திற்கு சென்று அவற்றை முன்பதிவு செய்யுங்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.
News item covered on some social media/digital news platforms that the luggage policy of railways has recently been changed, is incorrect.
It is hereby clarified that no change has been made in the recent past and the existing luggage policy is enforced for more than 10 years.
— Ministry of Railways (@RailMinIndia) June 6, 2022
அதே போன்று, "சமீப காலங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை மற்றும் ஏற்கனவே உள்ள லக்கேஜ் கொள்கை 10 ஆண்டுகளுக்கும் மேலாக அமல்படுத்தப்படுகிறது" என்று தேசிய போக்குவரத்து நிறுவனம் தெளிவுபடுத்தவில்லை. மேலும், ரயில் பெட்டிக்கு ஏற்ப எடையை நிர்ணயம் செய்துள்ளது. ஸ்லீப்பர் வகுப்பில் பயணிக்கும் பயணிகள் 40 கிலோ எடை வரை எடுத்துச் செல்லலாம் என்றும், ஏசி பெட்டிகளில் பயணிப்போர், அதிகபட்ச வரம்பாக 50 கிலோ வரை எடுத்து செல்லலாம் என்றும், முதல் வகுப்பு ஏசியில் பயணிப்போர், 70 கிலோ வரை எடுத்துச் செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது.
अगर सामान होगा ज्यादा, तो सफर का आनंद होगा आधा!
अधिक सामान ले कर रेल यात्रा ना करें। सामान अधिक होने पर पार्सल कार्यालय जा कर लगेज बुक कराएं। pic.twitter.com/gUuishbqr5
— Ministry of Railways (@RailMinIndia) May 29, 2022
மேலும், தீப்பற்றக்கூடிய மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்கள் உட்பட ஆபத்தான பொருட்களை ரயிலில் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. அடுப்பு, கேஸ் சிலிண்டர்கள், தீப்பற்றக்கூடிய ரசாயனம், பட்டாசு, அமிலம், துர்நாற்றம் வீசும் பொருட்கள், எண்ணெய், கிரீஸ், நெய் போன்ற பொருட்கள், உடைந்து அல்லது சொட்டு சொட்டாகப் பயணிகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடிய பொருட்கள் என இது போன்ற பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Also Read : IRCTC மூலம் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்வதற்கான வரம்பு அதிகரிப்பு - இந்திய ரயில்வே அறிவிப்பு
எனவே, ரயில் பயணத்தின் போது இது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்வது குற்றமாகும். மேலே குறிப்பிட்டுள்ள தடைசெய்யப்பட்ட பொருட்களை யாராவது எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால், அந்த பயணி மீது ரயில்வே சட்டத்தின் 164-வது பிரிவின் கீழ் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian Railways