ஹோம் /நியூஸ் /இந்தியா /

விமானத்தில் இருப்பது போல ரயில்களிலும் கருப்புப் பெட்டி, என்ஜினின் முன்பக்கத்தில் சிசிடிவி கேமரா - இந்திய ரயில்வே

விமானத்தில் இருப்பது போல ரயில்களிலும் கருப்புப் பெட்டி, என்ஜினின் முன்பக்கத்தில் சிசிடிவி கேமரா - இந்திய ரயில்வே

இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே

Indian Railways Black Box | இந்திய ரயில்வே தனது ரயில்களில் விமானத்தின் கருப்புப் பெட்டி போன்ற கருவியை பொருத்த முடிவு செய்துள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியாக இதற்கான பணிகளை நமது ரயில்வே துறை தொடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கருப்பு பெட்டி என்று குறிப்பிடப்படும் பிளாக் பாக்ஸ் (Black box) என்ற சொல்லை விமானம் தொடர்பானதாக நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். விமான பயணத்தின் போது விபத்துகள் ஏற்பட்டால் அதில் பதிவாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விபத்து எதனால், எப்படி நடந்தது என்பது பற்றி மதிப்பீடு செய்யப்படுகிறது.

விமான விபத்துக்கள் மற்றும் சம்பவங்களை விசாரிக்க வசதியாக விமானத்தில் வைக்கப்படும் எலெக்ட்ரானிக் ரெக்கார்டிங் டிவைஸான கருப்பு பெட்டிகள், ஃப்ளைட் ரெக்கார்டர்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இப்போது நம் இந்திய ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. ஆம், இந்திய ரயில்வே தனது ரயில்களில் விமானத்தின் கருப்புப் பெட்டி போன்ற கருவியை பொருத்த முடிவு செய்துள்ளது. பாதுகாப்பை அதிகரிக்கும் முயற்சியாக இதற்கான பணிகளை நமது ரயில்வே துறை தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கருப்புப் பெட்டி போன்ற இந்த டிவைஸ்கள் ரயிலின் டிரைவர் கேபினில் உள்ள செயல்பாடுகளை பதிவு செய்ய பயன்படுத்தப்படும். இது ரயில் பேரழிவுக்கான காரணங்களை கண்டறியவும், செயல்பாட்டு சிக்கல்கள் அல்லது மனித தவறுகளின் நிகழ்வுகளை கண்டறியவும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சில ரயில்களில் இந்த டிவைஸ் நிறுவப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில மாதங்களுக்குள் நாட்டில் உள்ள அனைத்து பயணிகள் ரயில் இன்ஜின்களிலும் இவை பொருத்தப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

இந்த புதிய டெக்னலாஜி மூலம் ரயில் என்ஜின்களைக் கண்காணிப்பது எளிதாகிறது. ரயில் இயங்கி கொண்டிருக்கும் போது லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட்களும் கண்காணிப்பில் இருப்பார்கள். ரயில் பாதையில் உள்ள இடையூறுகள் குறித்தும் எச்சரிக்கையுடன் இருக்க இந்திய ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒவ்வொரு கருப்பு பெட்டியுடனும் ரயில்கள் செல்லும் பாதையை கண்காணிக்கும் வகையில் இன்ஜினின் முன்புறம் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு எஞ்சினிலும் மொத்தம் 6 முதல் 8 ஜிபி அடிப்படையிலான டிஜிட்டல் சிசிடிவி கேமராக்கள் மற்றும் 8 சேனல் என்விஆர்-க்கள் (நெட்வொர்க் வீடியோ ரெக்கார்டர்ஸ் என்விஆர்) உள்ளன. இவற்றில் 4ஜிபி ஹார்ட் டிஸ்க்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. பைலட் மற்றும் கோ-பைலட்களின் செயல்பாடுகளை தெள்ளத்தெளிவாக வீடியோ எடுப்பதோடு அவர்களின் குரல்களை தெளிவாக பதிவு செய்ய இன்ஸ்டால் செய்யப்படும் கேமராக்களில் இன்-பில்ட் மைக்ரோஃபோன் கொடுக்கப்பட்டுள்ளது.

Also Read : உஷார்.! சளி, காய்ச்சல் மருந்துகளில் 50 போலிகள்.. இதுதான் முழு லிஸ்ட்!

தவிர எஞ்ஜினுக்குள் மட்டுமல்லாமல் எஞ்சினின் முன் மற்றும் பின்பக்கம் ரூஃபில் தலா 1 கேமரா மற்றும் கேபின்-01 மற்றும் கேபின்-02 ஆகியவற்றிலும் 2 கேமராக்கள் இன்ஸ்டால் செய்யப்படுகிறது. இவ்வளவு கேமராக்கள் பொருத்த காரணம் ஓட்டுநர் மற்றும் உதவி ஓட்டுநர்களின் வீடியோ மற்றும் ஆடியோவை பதிவு செய்யவே. துரதிர்ஷ்டவசமான சந்தர்ப்பத்தில் ரயில் விபத்து ஏற்பட்டால் விசாரணையின் போது இவை மிகவும் உதவியாக இருக்கும் என்று அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். பிளாக் பாக்ஸ் போன்றதொரு இந்த டிவைஸ் மைனஸ் 10 முதல் 55 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையைத் தாங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Also Read : உயிரிழந்த காதலியை திருமணம் செய்த காதலர்.. வாழ்நாளில் வேறு பெண் இல்லை என உறுதிமொழி - வைரலாகும் வீடியோ

இந்த டிவைஸுடன் வரும் சிசிடிவி கேமராக்கள் நைட் விஷன் அம்சம் கொண்டது மற்றும் IP அடிப்படையிலானது என்பதால் இரவிலும் தெளிவாக காட்சிகளை ரெக்கார்ட் செய்ய மற்றும் ரிமோட் மானிட்டரிங் செய்ய எளிதாக உதவுகிறது. தற்போது முதற்கட்டமாக மேற்கு மத்திய ரயில்வே நிர்வாகத்தின் கீழ் இருக்கும் ரயில்களில் இந்த டிவைஸ் இன்ஸ்டால் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த பிளாக் பாக்ஸ் போன்ற டிவைஸில் சேமிக்கப்படும் வீடியோ டேட்டாக்கள் 90 நாட்கள் வரை பாதுகாப்பாக இருக்கும் எனவும் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Black Box, Indian Railways, Tamil News