முகப்பு /செய்தி /இந்தியா / இயற்கையோடு ரயில் பயணம் போயிருக்கிறீர்களா… விஸ்டாடோம் ரயில் தெரியுமா?..

இயற்கையோடு ரயில் பயணம் போயிருக்கிறீர்களா… விஸ்டாடோம் ரயில் தெரியுமா?..

ரயில்

ரயில்

இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் செல்லும் ரயில் பாதைகளில் இந்த வகை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெளிநாடுகளைப் போல இந்தியாவிலும் முழுமையான கண்ணாடியால் வேயப்பட்ட கூரைகளோடு வடிவமைக்கப்பட்ட விஸ்டாடோம் ரயில் சேவைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது.

பொதுவாக பயணமே ஒரு நல்ல அனுபவம் தான். எண்ணற்ற பாடங்களை கற்றுத் தருகின்றன.

அதிலும் இயற்கையான சூழலில், மலைகளையும் அருவிகளையும் கடந்து நாம் பயணம் சென்றால் மனம் இலகுவாகி நம் மன அழுத்தங்கள் கவலைகள் கூட மறைந்து போய் ஒரு புத்துணர்ச்சி ஏற்படும். மலைப் பாதைகளில் நாம் ரயிலில் செல்லும் போது, அடைப்புகளே இல்லாமல் திறந்த ரயில் பெட்டிகளில் பயணித்தால் எப்படியிருக்கும். அப்படிப்பட்ட அனுபவத்தை தருவது  தான் விஸ்டாடோம் ரயில் பெட்டிகள்.

விஸ்டாடோம் ரயில் சேவைகள் நம் இந்தியாவிலும் இப்போது பிரபலம். இதற்காக பிரத்யேகமாக ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. முழுவதும் கண்ணாடியால் வேயப்பட்ட கூரைகளோடு, மிகப்பெரிய கண்ணாடி ஜன்னல்களோடு, வசதியான இருக்கைகளோடு இந்த விஸ்டாடோம் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ரயில் பெட்டியில் உட்கார்ந்து நாம் பயணிக்கும் போது காட்டுக்குள் சாகசப் பயணம் செய்யும் அனுபவம் கிடைக்கும். 360 டிகிரி கோணத்திலும் நாம் இயற்கையை ரசிக்க முடியும்.

இந்தியாவில் விஸ்டாடோம் ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தயாரிக்கிறது. கண்ணாடி கூரை, ஜன்னல்கள், சுழலும் வசதியான இருக்கை என உலகத்தரத்தில் தயாரிக்கப்படுகின்றன. மற்ற ரயில் பெட்டிகளில் இருக்கைகளின் எண்ணிக்கை 100ஐ நெருங்கும் அல்லவா? ஆனால்  விஸ்டாடோம் ரயிலில் ஒரு பெட்டியில் 44இருக்கைகள் மட்டுமே இருக்கும். Wi-Fi, GPS என மேம்படுத்தப்பட தொலை தொடர்பு வசதிகளும் உண்டு.

இதையும் படிங்க: ரயிலில் திருடி போரடிச்சிருச்சு.. ரயில் எஞ்சினையே திருடுவோம்… பீகார் பகீர்..

அதோடு இருக்கைகளின் பின்னால் டிவி ஸ்கிரீனும் பொருத்தப்பட்டிருக்கும். இந்தப் பெட்டிகளில் பொருத்தப்படும் கண்ணாடிகள் எளிதில் உடையாத அளவிற்கு லேமினேசன் முறையில் தயாரிக்கப்படுகின்றன. தானியங்கி நெருப்பு கண்காணிப்பு கருவி, அலாரம் இந்தப் பெட்டிகளில் உண்டு. எனவே மிகவும் பாதுகாப்பான பயணத்தை நம்பி மேற்கொள்ளலாம்.

இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் செல்லும் ரயில் பாதைகளில் இந்த வகை ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு ரயில்  பாதையில் மற்ற ரயில்கள் செல்லும் எண்ணிக்கை, போக்குவரத்து நெரிசல், இவையெல்லாம் கணக்கிடப்பட்டு விஸ்டாடோம் ரயில் சேவை நிர்ணயிக்கப்படுகிறது. மேலும் விஸ்டாடோம் ரயில்கள் பகல் நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றன.

தொழில்முறை அல்லாத சுற்றுலா நோக்கத்திற்கு மட்டுமே விஸ்டாடோம் ரயில் சேவையில்  முன்னுரிமை தரப்படுகிறது. நம் தென்னிந்தியாவில் பரவலாக இன்னும் இந்த வகை விஸ்டாடோம் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வரவில்லை. ஆனால் வட இந்திய மாநிலங்கள் பலவற்றில் விஸ்டாடோம் ரயில் சேவைர இருக்கிறது.

குறிப்பாக, விஷாகப்பட்டினம்-கிராந்துல் மார்க்கம், தாதர்-மத்கான் மார்க்கம், அலிபுர்தூர்-ஜல்பைகுரி மார்க்கம், கவுகாத்தி-பதார்பூர் மார்க்கம், டார்ஜிலஜிங்கில் தின்சுக்யா-நிகர்லகூன் மார்க்கம், அகமதாபாத்-கேவதியா மார்க்கம், யஷ்வந்த்பூர்-மங்களுரு மார்க்கம், கல்கா-சிம்லா மார்க்கம் என சில குறிப்பிட்ட பாதைகளில் இந்த சேவை இயக்கப்பட்டு வருகிறது.

வட இந்தியா பக்கம் ஜாலியா டூர் போற வாய்ப்பு கிடைச்சா விஸ்டாடோம் ரயில் பயணத்தை மிஸ் பன்னிடாதீங்க…

top videos

    செய்தியாளர்: ரொசாரியோ ராய்

    First published:

    Tags: Railway, Tourism, Train