ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரயில்வேவுக்கு சொந்தமான இடத்தில் கோயில் ஒன்று ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ரயில்வே அதிகாரிகள் கடவுளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் பகுதியில் ரயில்வேவுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளன. இந்த பகுதியில் காதிக் பஸ்தி என்ற பகுதியில் காதிக் சமூகத்தினர் 1920களில் இருந்து வாழ்ந்து வருகின்றனர். பழங்கள், காய்கறிகள்,மீன்கள் போன்றவற்றை விற்று பிழைப்பு நடத்தி வரும் இந்த மக்கள் அப்பகுதியில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்றையும் கட்டி வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள ஆக்கிரமிப்புகளில் இருந்து வெளியேறுமாறு ரயில்வே நிர்வாகம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஆக்கிரமிப்பில் கோயிலும் உள்ளதால் ரயில்வே நிர்வாகத்தினர் கடவுளுக்கும் சேர்த்து நோட்டீஸை அனுப்பியுள்ளனர். ரயில்வே அனுப்பிய நோட்டீஸில் பெறுநர் அனுமான் எனப் பெயர் போட்டு அதில், "நீங்கள் சட்டவிரோதமாக ரயில்வேக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்துள்ளீர்கள். இது சட்டப்படி குற்றம்.
இதையும் படிங்க: காதலியுடன் ரகசிய ஷாப்பிங் வந்த கணவர்... கடைவீதியில் மனைவியிடம் மாட்டி உதைவாங்கும் வீடியோ வைரல்!
எனவே, பத்து நாட்களுக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் . 10 நாட்களுக்குள் காலி செய்யாவிட்டால், உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டவனுக்கு ரயில்வே வாரியம் நோட்டஸ் அனுப்பிய விவகாரம் பரபரப்பை கிளப்பியது மட்டுமல்லாது சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசிக்கும் மக்களை காலி செய்ய சொல்வது அவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Encroachment, Indian Railways