Home /News /national /

6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்திய ரயில்வே

6 ஆண்டுகளில் 72,000 பணியிடங்களை நீக்கிய இந்திய ரயில்வே

ரயில்வே

ரயில்வே

Indian railway: ரயில்வேயின் 16 மண்டலங்களின் ஆவணங்களின்படி கடந்த 2015-16ல் இருந்து 2020-21 வரை 56,888 அத்தியாவசியமற்ற பணியிடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 15,495 பணியடங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்கவும் ...
    கடந்த 6 ஆண்டுகளில் 72,000 அவசியமற்ற பணியிடங்களை  இந்திய ரயில்வே திரும்ப ஒப்படைத்து நீக்கியுள்ளது தெரியவந்துள்ளது.

    இந்தியன் ரயில்வே என்பது நாட்டில் அதிகம் நபர்கள் பணியாற்றும் ஒரு துறையாகும். பல லட்சம் பேர் இந்தியன் ரயில்வே துறையில் பணியாற்றி வருகின்றனர்.  இந்நிலையில், கடந்த 6 ஆண்டுகளில் அத்தியாவசியமற்ற 81,000 பணியிடங்களை திரும்ப ஒப்படைக்கப் பரிந்துரை செய்து, 72,000 பணியிடங்களை  இந்தியன் ரயில்வே நீக்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

    ரயில்வேயில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களே நீக்கப்பட்டவையாகும். நவீன மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக இந்தப் பணியிடங்கள் தேவையற்றவையாகியுள்ளன. எதிா்காலத்திலும் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படப் போவதில்லை. தற்போது, இந்த பணியிடங்களில் பணியாற்றிவரும் ஊழியா்கள் வேறு துறைகளில் பணியமா்த்தப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

    ரயில்வேயின் 16 மண்டலங்களின் ஆவணங்களின்படி கடந்த 2015-16ல் இருந்து 2020-21 வரை 56,888 அத்தியாவசியமற்ற பணியிடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 15,495 பணியடங்களை திரும்ப ஒப்படைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதையும் படிங்க: சத்தமில்லாமல் சரியும் பெண்கள்… 5 ஆண்டுகளில் வேலையை உதறிய 2 கோடி பேர்! ஷாக் ரிப்போர்ட்!


    அதிகபட்சமாக வடக்கு ரயில்வே 9000 பணியிடங்களை நீக்கியுள்ளது, தென்கிழக்கு ரயில்வே 4,677 பணியிடங்களையும் தெற்கு ரயில்வே 7,524 பணியிடங்களையும் கிழக்கு ரயில்வே 5,700 பணியிடங்களையும் நீக்கியுள்ளன. பணியிடங்கள் தேவையா அல்லது வேண்டாமா என்பது தொடர்பான ஆய்வு தற்போது ஊழியர்களிடம் நடத்தப்பட்டு வருவதாகவும் இது முடிந்த பின்னர் 9,000 பணியிடங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் என எதிர்பார்ப்பதாக ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

    மேலும் படிக்க: கோவாவிற்கு சுற்றுலா வந்த 12 வயது ரஷ்ய சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டல் ஊழியர்...


    மேலும் அவுட்சோர்சிங் காரணமாக ரயில்வே பணியிடங்கள் வெகுவாக குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. நாட்டில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையான இந்தியன் ரயில்வேவுக்கு ஊழியர்களின் ஊதியம், பென்சன் போன்றவை மிகபெரிய பாரமாக இருந்துவருகிறது. தனது வருவாயில் மூன்றில் ஒரு பங்கை  ஊழியர்களின்  ஊதியம்,  பென்சன் ஆகியவற்றுக்கு இந்தியன் ரயில்வே செலவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Indian Railways, Job, Railway

    அடுத்த செய்தி