தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை டிவியில் பார்த்தோம்.. இப்போது நேரில் செல்கிறோம் - நீரஜ் சோப்ரா

நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற 32 வீரர், வீராங்கனைகளுக்கு சுதந்திரதின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

  நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். செங்கோட்டை பகுதியில் 5000 க்கும் அதிகமான வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 8-வது முறையாக சுதந்திரதினத்தில் தேசியக்கொடி ஏற்றுகிறார்.

  பிரதமர் மோடி


  ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 7 பதக்கங்களை வென்றது. ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற 32 வீரர், வீராங்கனைகளுக்கு சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

  நீரஜ் சோப்ரா


  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்கள் செங்கோட்டைக்கு புறப்பட்டனர். ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா பேசுகையில், “ சுதந்திர தினவிழாவில் கொடி ஏற்றும் நிகழ்வை முன்பு நாங்கள் டிவியில் பார்ப்போம். இப்போது நாங்கள் தனிப்பட்ட முறையில் நேரில் செல்கிறோம். இது ஒரு புதிய அனுபவம். தனிப்பட்ட விளையாட்டுப் போட்டிகளில் நாம் இவ்வளவு காலம் தங்கப்பதக்கம் வென்றதில்லை. என்னால் நாடு பெருமைப்படுவதை நான் நன்றாக உணர்தேன்.” என்றார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: