• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்திய-ரஷ்ய கடற்படைகள் வங்கக்கடல் பகுதியில் போர் ஒத்திகை...

இந்திய-ரஷ்ய கடற்படைகள் வங்கக்கடல் பகுதியில் போர் ஒத்திகை...

இந்தியா, ரஷ்யா கடற்படைகள் வங்கக் கடல் பகுதியில் போர் ஒத்திகை

இந்தியா, ரஷ்யா கடற்படைகள் வங்கக் கடல் பகுதியில் போர் ஒத்திகை

இந்தியா, ரஷ்யா கடற்படைகள் வங்கக் கடல் பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

  • Share this:
    இந்தியா- ரஷ்யா இடையேயான ஒப்பந்தப்படி இரு நாட்டு கடற்படையினர் 2003-ஆம் ஆண்டு முதல் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் 11-வது போர் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெற்றது.



    இந்திய தரப்பில் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் ரன்விஜய், உள்நாட்டில் கட்டமைக்கப்பட்ட சகாயத்ரி போர்க்கப்பல், கடற்படை டேங்கர் சக்தி உள்ளிட்டவை இந்த ஒத்திகையில் இடம்பெற்றன. இரு நாட்டு வீரர்களும் கடல் மேற்பரப்பில் இருந்தும், விமானத்தில் இருந்தபடியும் போர் பயிற்சி மேற்கொண்டனர்.

    Also read: சீனாவுடன் நடத்தப்படும் பேச்சுகளின் பலன் என்ன? மக்களுக்கு விளக்கவேண்டும்.. - காங்கிரஸ் கேள்வி

    ரஷ்யாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்றிருந்த நிலையில், இருநாட்டு கடற்படையும் போர் ஒத்திகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: