நாட்டின் முதல் விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மறுசீரமைப்புப்பணிக்காக தனது வழக்கமான பணிகளில் இருந்து இடைக்கால ஓய்வு பெற்றது. முழுமையான பழுது பார்ப்புக்காக, கர்நாடக மாநிலம் காவார் கடற்படை தளத்துக்கு விக்ரமாதித்யா போர்க்கப்பல் அனுப்பி வைக்கப்பட்டது.
45 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த விமானம் தாங்கி கப்பலில் கடந்த 15 மாதங்களாக மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதில், கப்பலின் அனைத்து என்ஜின்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் கார்வார் கடற்படை தளத்தையொட்டிய கடலில் இறங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகா மற்றும் கோவா ஒட்டிய கடல் பகுதிகளில் மார்ச் மாத தொடக்கத்தில் பயிற்சியில் ஈடுபட உள்ளது.
இதன் பிறகு மார்ச் 31 ஆம் தேதி இந்தியக் கடற்படையிடம் விக்ரமாதித்யா போர்க் கப்பல் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போர்க்கப்பலில் 26 MiG-29K போர் விமானங்கள், Ka-28 நீர்மூழ்கி எதிர்ப்பு போர் ஹெலிகாப்டர்கள் உட்பட 36 வானூர்திகள் உள்ள நிலையில், அடுத்த மாதம் ஏவுகணைகள், ஆயுத பரிசோதனைகள் மீண்டும் தொடங்க உள்ளதாகவும் ஏப்ரல் மாதத்தில் விமானச் செயல்பாடுகளின் பரிசோதனை தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். புதுப்பிக்கப்பட்ட என்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் பிரெஞ்சு ரஃபேல்-எம், யுஎஸ் எஃப்-18 ஆகிய போர் விமானங்கள் இணைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலாக்கா ஜலசந்தியிலிருந்து தென் இந்தியப் பெருங்கடல் வரை சீன கடற்படை ஆதிக்கம் செலுத்த முயன்று வரும் நிலையில், விக்ரமாதித்யா போர்க் கப்பல் மீண்டும் செயல்பாட்டுக்கு வருவது இந்திய ராணுவத்தின் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த 2 ஆண்டுகளில் மேலும் 2 ஏவுகணை தாங்கிய நீர்மூழ்கிக்கப்பல்களைக் கடற்படையில் இணைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஐஎன்எஸ் விக்ரமாதித்யா சோவியத் யூனியனால் உருவாக்கப்பட்டது. அட்மிரல் கோர்ஷ்கோவ் என இயற்பெயர் கொண்ட இந்தப் போர்க் கப்பலை வாங்க, 2004 ஆம் ஆண்டு இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. மறுசீரமைப்புக்குப் பிறகு இந்தக் கப்பல் 2013 ஆம் ஆண்டு இந்தியா வசம் வந்தது. அதன் பிறகே, இந்த விமானம் தாங்கி கப்பலுக்கு ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்று பெயரிட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army, Indian Navy