Home /News /national /

துருக்கி நாட்டில் குடியுரிமை பெற முயலும் இந்திய முஸ்லிம்கள்!

துருக்கி நாட்டில் குடியுரிமை பெற முயலும் இந்திய முஸ்லிம்கள்!

துருக்கிக் குடியுரிமைக்கு முயலும் முஸ்லிம்கள்.

துருக்கிக் குடியுரிமைக்கு முயலும் முஸ்லிம்கள்.

இந்தியாவைச் சேர்ந்த முஸ்லிம் செல்வந்தர்கள் துருக்கி நாட்டின் குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தியாவில் உள்ள முஸ்லிம் செல்வந்தர்கள் 4 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ₹.31,222,400 ) வரை செலவு செய்து துருக்கி நாட்டு குடியுரிமை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  முதலீட்டின் மூலமாக துருக்கி குடியுரிமை பெறுவதற்கான வழிகளை வாட்ஸ் ஆப் டெலிகிராம் குழுக்களில் கலந்தாலோசித்து வருகின்றனர்.

    டெல்லி, மீரட், லக்னோ, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு, திருவனந்தபுரம் உள்ளிட்ட பெருநகரங்களைச் சேர்ந்த முஸ்லிம் செல்வந்தர்கள் ரியல் எஸ்டேட் துறையில் பணம் முதலீடு செய்வதன் மூலம் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

    துருக்கி நாட்டில் 4 லட்சம் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் எந்த வெளிநாட்டவரும் குடியுரிமை பெறுவதற்கான தகுதியைப் பெறமுடியும். அப்படி முதலீடு செய்பவர் அவர் வாங்கும் சொத்தை அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு விற்கக்கூடாது போன்ற நிபந்தனைகள் உண்டு.

    இந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் எந்த வெளிநாட்டவரும், தன்னுடைய மனைவி, 18 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் என அனைவருக்கும் சேர்த்து துருக்கி நாட்டின் பாஸ்போர்டை பெற முடியும்.

    துருக்கியின் பல நகரங்களில் வீடுகளை வாங்கியுள்ள சில இந்திய முதலீட்டாளர்களை நியூஸ் 18 தொடர்பு கொண்டு பேசியது.

    மீரட்டைச் சேர்ந்த முகமது காஜா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன்னுடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுக்கும் துருக்கி நாட்டுக் குடியுரிமை பெறுவதற்காக $250,000 அமெரிக்க டாலர்களை (₹19,483,122.75) செலவழித்து ஒரு வீட்டை வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார். துருக்கியில் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் அதிகமாகி வருவதால் அவர் இஸ்தான்புல்லில் வீடு வாங்கியதாகத் தெரிவித்தார்.

    மும்பையைச் சேர்ந்த பெரோஸ் ஆலம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) $800,000 (₹62,446,000)அமெரிக்க டாலர்களை செலவழித்து துருக்கியின் அங்காரா நகரில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்றை அவரது தந்தை வாங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இந்தியாவை விடத் துருக்கியில் ரியல் எஸ்டேட்டில் குறைந்த விலையில் சொத்துகளை வாங்க முடியும் என்றும், விரைவில் அவர் துருக்கி பாஸ்போர்டை பெறுவார் எனவும் தெரிவித்தார்.

    துருக்கியில் முதலீடு செய்வதன் மூலமாக ஒட்டுமொத்த குடும்பமும், அதாவது மனைவி அல்லது கணவன், 18 வயதுக்குக் கீழான குழந்தைகள், மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் (வயது தடையில்லை) உள்ளிட்ட அனைவரும் அந்நாட்டின் குடியுரிமையைப் பெறமுடியும்.

    முதலீடுகளின் மூலமாகத் துருக்கி குடியுரிமை பெற விரும்பும் யாரும் சில வழிகள் மூலமாக அதைப் பெற முடியும்.

    துருக்கியில் முதலீடு செய்வதன் மூலம் குடியுரிமை பெற முடியும்.


    *குறைந்தபட்சம் $400,000 அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள   வீடு அல்லது மனையை வாங்கவேண்டும். அதை அடுத்த   மூன்றாண்டுகளுக்கு விற்கக்கூடாது.

    *குறைந்தபட்சம் $500,000 டாலர்கள் மதிப்புள்ள துருக்கி   அரசின் பத்திரங்களை வாங்கவேண்டும். அதை அடுத்த   மூன்றாண்டுகளுக்கு விற்கக்கூடாது.

    *ஏதேனும் ஒரு துருக்கி வங்கியில் $500,000 அமெரிக்க்   டாலர்களை (₹39,028,000) டெப்பாசிட் செய்யவேண்டும்.   அதை அடுத்த மூன்றாண்டுகளுக்கு எடுக்கக்கூடாது.

    *துருக்கியில் உள்ள ரியல் எஸ்டேட் துறை நிறுவனத்திலோ   அல்லது வேறு ஒரு பெருநிறுவனத்திலோ $500,000   அமெரிக்க  டாலர்கள் மதிப்புள்ள பங்குகளை   வாங்கவேண்டும். அதை அடுத்த மூன்றாண்டுகளுக்கு   விற்கக்கூடாது.

    *குறைந்தபட்சம் 50 முழுநேர வேலை வாய்ப்புகளை   துருக்கியில் உருவாக்கவேண்டும்.

    மேற்க்கூறிய ஏதேனும் ஒரு வழியின் மூலம் துருக்கியில் குடியுரிமை பெறமுடியும்.

    முதலீடுகளின் மூலம் துருக்கியில் குடியுரிமை மற்றும் வாழ்வுரிமை பெறுபவர்களுக்கு உதவும் ஹாஷ்மி என்ற நிறுவனத்தின் தலைமை அதிகாரி தஜமுல் ஹுசைனிடம் பேசியபோது, இந்தியர்கள் பலர் துருக்கியில் முதலீடு செய்வதற்காக ஆர்வமுடன் முன் வருவதாகத் தெரிவித்தார். வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், குழந்தைகளை வெளிநாடுகளில் படிக்க வைக்க விரும்புபவர்கள், வேறு நாட்டில் தொழில் தொடங்க விரும்புபவர்கள் உள்ளிட்டோர் துருக்கியில் முதலீடு செய்ய முன்வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    வெளிநாட்டு முதலீடுகளின் மூலம் வருவாயைப் பெருக்கத் துருக்கி அரசாங்கமும் தொடர்ந்து ஆர்வம் காட்டிவருகிறது. ரஷ்ய உக்ரைன் போராலும் பல வெளிநாட்டவர் துருக்கியில் முதலீடுகளைச் செய்து வருகின்றனர்.

    இந்திய சட்டப்படி எந்த ஒரு இந்தியரும் ஒரு வருடத்திற்கு $250,000 (₹19,514,375) டாலர்கள் மட்டுமே வெளிநாடுகளில் முதலீடு செய்யமுடியும். இதனால் இரண்டு குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் இந்தியர்கள் துருக்கியில் முதலீடுகளை செய்து வருகின்றனர்.


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Muslim, Turkey

    அடுத்த செய்தி