ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரதமர் மோடி முதல் தீபிகா படுகோன் வரை... ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட இந்தியர்களின் பட்டியல்

பிரதமர் மோடி முதல் தீபிகா படுகோன் வரை... ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட இந்தியர்களின் பட்டியல்

டிவிட்டர் இந்தியா 2021

டிவிட்டர் இந்தியா 2021

சமூக வலைதளங்களில் ட்விட்டரின் பயன்பாடு தனித்துவம் மிக்கதாக உள்ளது. இங்கு 4 வரியில் பதியப்படும் தகவல்கள் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ட்விட்டரில் அதிகம் ஃபாலோயர்களைக் கொண்ட இந்தியர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் பிரதமர் மோடி முதலிடம் வகிக்கிறார். அவரை தவிர்த்து ஹிருத்திக் ரோஷன், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

சமூக வலைதளங்களில் ட்விட்டரின் பயன்பாடு தனித்துவம் மிக்கதாக உள்ளது. இங்கு 4 வரியில் பதியப்படும் தகவல்கள் பல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. அதன் காரணமாக, ஏராளமானோர் ட்விட்டரை பயன்படுத்தி வருவதால் நாளுக்கு நாள் இதன் யூசர்கள் அதிகரித்துள்ளார்கள். இவர்களில் அதிகம் ஃபாலோ செய்யப்பட்ட பிரபலங்களின் பட்டியலை பார்க்கலாம்...

பிரதமர் நரேந்திர மோடி

1. பிரதமர் மோடி

ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாகவும், பிரபலமாகவும் இருக்கும் பிரதமர் மோடிதான் அதிகம் ஃபாலோயர்களைக் கொண்டவர்கள் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். கடந்த 2009 ஜனவரியில் ட்விட்டரில் இணைந்த அவருக்கு தற்போது வரை 73.5 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளன. இந்த அக்கவுன்ட் 2,386 பேரை ஃபாலோ செய்கிறது.

அமிதாப்

2. அமிதாப் பச்சன்

திரையுலக நட்சத்திரங்களில் அமிதாப் பச்சன் அதிகமான ட்வீட்களை பதிவிட்டு வருகிறார். அவருக்கு 46.7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். கடந்த 2010 மே மாதம் ட்விட்டரில் இணைந்த அவர் 1800 பேரை ஃபாலோ செய்கிறார்.

PM Modi invites Pope
பிரதமர் மோடி

3. பிரதமர் அலுவலகம்

அதிகம் ஃபாலோயர்களை பெற்றவர்கள் பட்டியலில் இந்திய பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு 3ம் இடத்தை பிடித்துள்ளது. 45.5 மில்லியன் ஃபாலோயர்கள் இந்த கணக்கிற்கு உள்ளனர். பிரதமர் அலுவலகத்திற்கான ட்விட்டர் கணக்கு கடந்த 2012 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த கணக்கு 498 பேரை ஃபாலோ செய்கிறது.

விராட் கோலி

4. விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டாராக இருக்கும் விராட் கோலி கடந்த 2009 செப்டம்பரில் ட்விட்டரில் இணைந்தார். அவருக்கு தற்போது 45.3 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

சல்மான் கான்

5. சல்மான் கான்

பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான், அதிகம் ஃபாலோயர்களைக் கொண்ட இந்திய பிரபலங்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடித்துள்ளார். 2010 ஏப்ரலில் அவரது ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு 43.4 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.அவர் 28 கணக்குகளை பின் தொடர்கிறார்.

அக்ஷய் குமார்

6. அக்சய் குமார்

முன்னணி பாலிவுட் நட்சத்திரமான அக்சய் குமாருக்கு ட்விட்டரில் 43.2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். 2009 ஏப்ரலில் ட்விட்டரில் இணைந்த அவர் 27 கணக்குகளை பின்தொடர்கிறார்.

ஷாரூக்கான்

7. ஷாரூக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கானுக்கு ட்விட்டரில் 42.2 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். 2010 ஜனவரியில் ட்விட்டரில் இணைந்த அவர் 77 கணக்குகளை பின் தொடர்கிறார்.

சச்சின் டெண்டுல்கர்

8. சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ட்விட்டர் கணக்கை 36.5 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். 2010 ஏப்ரலில் ட்விட்டர் கணக்கை தொடங்கி சச்சின் 82 பேரை பின் தொடர்கிறார்.

Hrithik Roshan announces Krrish 4 on 15 years of Krrish
ரித்திக் ரோஷன்

9. ஹிருத்திக் ரோஷன்

பாலிவுட் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷனின் ட்விட்டர் கணக்கை 31.1 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். 2010 பிப்ரவரியில் கணக்கை தொடங்கிய ரோஷன் 87 பேரை ஃபாலோ செய்கிறார்.

தீபிகா படுகோன்

10. தீபிகா படுகோன்

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்ஸை கொண்ட இந்தியர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஒரே பெண் இவர்தான். இவருக்கு 27.6 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். அவர் 67 கணக்குகளை பின் தொடர்கிறார். 2010 ஜனவரியில் இவரது ட்விட்டர் கணக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : பிரபஞ்ச அழகி ஹர்னாஸ் சந்து பெயரில் போலி கணக்கு: ப்ளூ டிக் வழங்கிய ட்விட்டர்

இதையும் படிங்க : சர்வதேச முன்னணி ஐ.டி. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக இந்தியாவை சேர்ந்த ஆனந்த் ஈஸ்வரன் நியமனம்

இதையும் படிங்க : உள்ளாடையை மாஸ்க்காக அணிந்து வந்த விமானப் பயணி... பணியாளருடன் கடும் வாக்குவாதம்

First published:

Tags: Twitter