INDIAN MILITARY RANKED FOURTH MOST POWERFUL IN THE WORLD BY MILITARY DIRECT STUDY MUT
உலகிலேயே சக்தி வாய்ந்த ராணுவம்: 4வது இடத்தில் இந்தியா, சீனா நம்பர் 1 - ஆய்வில் தகவல்
உலகில் 4வது இடம்- பலம் வாய்ந்த இந்திய ராணுவம்.
சீனா நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. பயங்கரமான ராணுவ பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளிலும் கூட அமெரிக்கா 2வது இடத்திலும் (74 புள்ளிகள்), ரஷ்யா 69 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் 61 புள்ளிகளுடன் இந்தியா 4ம் இடத்திலும் 58 புள்ளிகளுடன் பிரான்ஸ் 5ம் இடத்திலும் 43 புள்ளிகளுடன் பிரிட்டன் 9ம் இடத்திலும் உள்ளன.
உலகநாடுகளின் ராணுவ பலத்தில் 4வது பலம் வாய்ந்த ராணுவமாக இந்தியா ராணுவம் திகழ்வதாக ‘மிலிட்டரி டைரக்ட்’ என்ற ராணுவ வெப்சைட் நடத்திய ஆய்வில் வெளியாகியுள்ளது.
சீனா நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. பயங்கரமான ராணுவ பட்ஜெட் நிதி ஒதுக்கீடுகளிலும் கூட அமெரிக்கா 2வது இடத்திலும் (74 புள்ளிகள்), ரஷ்யா 69 புள்ளிகளுடன் 3ம் இடத்திலும் 61 புள்ளிகளுடன் இந்தியா 4ம் இடத்திலும் 58 புள்ளிகளுடன் பிரான்ஸ் 5ம் இடத்திலும் 43 புள்ளிகளுடன் பிரிட்டன் 9ம் இடத்திலும் உள்ளன.
இந்த ஆய்வு எடுத்துக் கொண்ட அளவுகோல் என்னவெனில் ராணுவ பட்ஜெட், செயலில் உள்ள செயலில் இல்லாத ராணுவ வீரர்கள் படைபலம், வான்வெளி, கடல், நிலம் மற்றும் அணு ஆயுத ஆதாரங்கள், சராசரி சம்பளம், ராணுவ ஆயுதங்களின் எடை ஆகியவற்றை அளவுகோலாகக் கொண்டு புள்ளிகள் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகின்றன.
பட்ஜெட் படி பார்த்தால் அமெரிக்கா ஆண்டுக்கு 732 பில்லியன் டாலர்கள் ராணுவத்துக்கு ஒதுக்குகிறது இதில் நம்பர் 1 ஆக இருந்தாலும் மற்ற குறியீடுகளில் சீனா பலம் வாய்ந்த ராணுவமாக முதலிடம் பெறுகிறது.
சீனாவின் ஆண்டு ராணுவ பட்ஜெட் 261 பில்லியன் டாலர்கள். இந்தியா 71 பில்லியன் டாலர்கள். கடலில் சீனா நம்பர் 1, வானில் அமெரிக்கா, தரையில் ரஷ்யா பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. அமெரிக்காவிடம் மொத்தம் 14,441 ஏர்ஷிப்புகள் உள்ளதால் வான்வெளியில் தாதாவாகத் திகழ்கிறது. ரஷ்யா இதில் 4682, சீனா 3,587.
ஆனால் தரைப்படையில் 54,866 ஆயுத வாகனங்களுடன் ரஷ்யா முதலிடம் பெறுகிறது. அமெரிக்கா வெகு அருகில் 50,236 ராணுவ தளவாட வாகனங்களுடன் 2ம் இடத்தில் உள்ளது. ஆனால் கடலில் சீனா 406 கப்பல்களுடன் முதலிடம் வகிக்கிறது. ரஷ்யா 278, அமெரிக்காவும் இந்தியாவும் 202.
ராணுவத்தில் அன்னிய முதலீட்டை அங்கீகரிக்கும் இந்தியா தானாகவே 74% எஃப்.டி.ஐயும் அரசு அனுமதியுடன் 100% எஃப்.டி.ஐ,யும் அனுமதிக்கிறது. இந்திய ராணுவத்துறைகளில் அன்னிய முதலீடு 200%-ஐயும் கடந்து சென்று விட்டது குறிப்பிடத்தக்கது.
இதனால் அயல்நாட்டு முதலீடு இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பாதுகாப்பு அமைச்சகம் கடந்த பிப்ரவரியில் Main Battle Tank Arjun Mark 1A வை வாங்குவதற்காக ரூ.6000 கோடியை ஒதுக்கியதும் குறிப்பிடத்தக்கது.