இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தாமதமாகும்: வானிலை ஆய்வு மையம்

ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை  தாமதமாகும்: வானிலை ஆய்வு மையம்
மழை
  • News18
  • Last Updated: June 7, 2019, 8:34 AM IST
  • Share this:
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி 8-ம் தேதிக்குப் பிறகே தமிழகத்தில் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மழைப்பொழிவில் சுமார் 70 விழுக்காடு மழை தென்மேற்கு பருவமழையால் கிடைக்கிறது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தி்ல் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை கடந்த சில ஆண்டுகளாக தாமதமாகவே தொடங்குகிறது.

அதே போல் இந்த ஆண்டும் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவ மழையின் போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாநிலங்களான கோவா, குஜராத், மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக மழைப்பொழிவை பெறும்.


தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களும் இந்தக் காலக்கட்டத்தில் பரவலாக நல்ல மழையை பெறும். இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்கெனவே பருவமழை தொடங்கி விட்டது. ஆனால் அரபிக்கடலின் மேற்குப் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கேரளாவில் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாளை மறுநாள் கேரளாவில் பருவமழை தொடங்கும் என்றும், அதையடுத்து தமிழகத்தின் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதே நேரம் உள் தமிழகம் மற்றும் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமானது வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் உள் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்றும், வழக்கமானதை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரபிக்கடலை ஒட்டியுள்ள குமரிக்கடல், மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அந்தப் பகுதிகளில் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அதே நேரம் ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா, கங்காநகர், பிகானீர், ஜெய்சல்மீர், அஜ்மர், ஜெய்பூர் உள்ளிட்ட நகரங்களில் 45 டிகிரி செல்சியசைத் தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லி, சண்டிகர், பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் புழுதிப்புயல் வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Also see... தண்ணீர் மோசடியை தட்டிக்கேட்ட சமூக ஆர்வலர் அடித்து கொலை: பதற வைக்கும் பின்னணி

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading