கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

கேரள மாநிலத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கேரளாவில் அடுத்த 24 மணிநேரத்துக்கு கனமழை தொடரும்: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
இடுக்கி
  • Share this:
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், மாவட்டமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதேபோல மலப்புரம், வயநாடு மாவட்டங்களிலும் கனமழையின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. பெரியார் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்ததால், கொச்சியின் அலுவாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயம் மழைநீரில் மூழ்கியது. மழை பாதிப்பில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இடுக்கி, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களுக்கு வரும் 11-ஆம் தேதி வரை ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை தொடரும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 மேலும் படிக்க... தொடர்ந்து ஐந்தாவது நாளாக நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்..

மீட்பு நடவடிக்கைகளில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். 

 
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading