Home /News /national /

வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்... வானிலை ஆய்வு மையம்!

வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்... வானிலை ஆய்வு மையம்!

  • News18
  • Last Updated :
    இந்தியாவில் மார்ச் முதல் மே மாதம் வரை வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    குறிப்பாக ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசத்தில் இயல்பைவிட ஒரு டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக வெப்பநிலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் பூஜ்யம் புள்ளி மூன்று ஏழு டிகிரி செல்சியஸ் முதல் பூஜ்யம் புள்ளி நான்கு ஒன்று செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும்.

    மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைந்த அளவிலேயே வெப்பம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு, மேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Weather, Weather Update

    அடுத்த செய்தி