கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிகை!

கனமழை முதல் அதிதீவிரமான கனமழை பெய்யும் என்பதை ரெட் அலெர்ட் குறிக்கும்

கேரளாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிகை!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: June 8, 2019, 11:41 AM IST
  • Share this:
பருவமழை தொடங்க உள்ள நிலையில் கேரளாவின் பல்வேறு மாநிலங்களில் நாளை முதல் செவ்வாய்க்கிழமை வரை ரெட் அலெர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்தில் தென் மேற்கு பருவமழை துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தாக்கமாக வடகிழக்கு மாநிலங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கும். இதனால் அந்த மாநிலங்களுக்கு கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியிலும், கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரையை ஒட்டிய பகுதியிலும் காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாகி மேலும் வலுவடைய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரெட் அலெர்ட்

கனமழை முதல் அதிதீவிரமான கனமழை பெய்யும் என்பதை ரெட் அலெர்ட் குறிக்கும். திருச்சூர், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலெர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதிகனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Also see... கேரளாவில் நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see...
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading