பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் அலோபதி மருத்துவத்தை ‘முட்டாள் மருத்துவம்’ என்றும் விமர்சனம் செய்திருந்தார்.
இது குறித்து அவர் பேசிய வீடியோவில், ஆங்கில மருந்துகளை சாப்பிட்ட லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர், இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் ஒப்புதல் அளித்த ரெம்டெசிவிர், பவிபுளு, மற்ற மருந்துகள் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டது என்று கூறியிருந்தார்.
பாபா ராம்தேவின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில்,
ராம்தேவின் கருத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன், ராம்தேவ் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தார். மேலும் தனது கருத்து, யாரையேனும் காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறியிருந்தார்.
Must Read : தன் மகளை மருத்துவராக்கிய ஓர் ஏழைத் தாயின் கதை....
இந்நிலையில், அலோபதி (ஆங்கில)
மருத்துவத்தை தவறாகப் பேசிய பாபா ராம்தேவ், அடுத்த 15 நாட்களில் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லாவிடில் 1000 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் கோரி இந்திய மருத்துவ சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.