முகப்பு /செய்தி /இந்தியா / இந்தியாவை எந்த நேரத்திலும் கொரோனா 3ஆவது அலை தாக்கலாம் - இந்திய மருத்துவர்கள் சங்கம்

இந்தியாவை எந்த நேரத்திலும் கொரோனா 3ஆவது அலை தாக்கலாம் - இந்திய மருத்துவர்கள் சங்கம்

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்

சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா 3ஆவது அலை என்பது தவிர்க்க முடியாதது. இப்படியான சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் மக்கள் கூட்டமாக கூடுவதால் இந்தியாவில் எந்த நேரத்திலும் கொரேனா மூன்றாவது அலை தாக்கலாம் என இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், “நாடு இப்போதுதான் கொரோனா 2ஆவது அலையின் பேரழிவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறது. தொற்று பாதிப்புகளின் கடந்த காலங்கள், சர்வதேச நிலவரங்களின்படி கொரோனா 3ஆவது அலை என்பது தவிர்க்க முடியாதது. எந்த நேரத்திலும் மூன்றாவது அலை இந்தியாவை தாக்கக் கூடும். இப்படியான சூழ்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பொதுமக்கள் ஒன்று கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சுற்றுலாக்கள், யாத்திரைகள் என்பதெல்லாம் மக்களுக்கு அவசியமானதுதான். ஆனால் இன்னும் சில மாதங்கள் பொறுத்திருந்துதான் ஆக வேண்டும். கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொள்ளாமல் இதுபோல் ஒன்று கூடல்களுக்கு அனுமதித்தால் கொரோனா மூன்றாம் அலை அதிவேகமாக பரவ இவை காரணமாகிவிடும். கடந்த ஒன்றரை ஆண்டுகால படிப்பினைகள் மூலம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது; கொரோனாவை தடுக்கும் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றுவது ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Must Read : மேகதாதுவில் அணைகட்ட கூடாது... கடைமடை மாநிலத்துக்கு தான் அதிக உரிமை உள்ளது - ஜி.கே மணி

இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது.

Read More : கொரோனா 3ஆவது அலை... ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி

நாடு முழுவதும கடந்த 24 மணிநேரத்தில் 37,154 பேர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 8 லட்சத்து 74 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 39,649 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 14 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.50 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 724 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 4,08,764 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: CoronaVirus, Covid-19, Indian medical association