• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்திய வரைபட விவகாரம்: எதிர்ப்பினால் பணிந்தது உலகச் சுகாதார அமைப்பு

இந்திய வரைபட விவகாரம்: எதிர்ப்பினால் பணிந்தது உலகச் சுகாதார அமைப்பு

உலக சுகாதார மையம் (கோப்புப்படம்)

உலக சுகாதார மையம் (கோப்புப்படம்)

வரைபடத்தில், புள்ளிகள் மற்றும் கோடுகளால் காட்டப்பட்டவை, தோராயமான எல்லை கோடுகள். இந்த கோடுகள், உண்மையான எல்லை பகுதிகளாக இல்லாமலும் இருக்கலாம்.

  • Share this:
    உலகச் சுகாதார அமைப்பு இந்திய வரைபடத்தை தவறாகச் சித்தரித்ததற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து உலகச் சுகாதார அமைப்பு பணிந்து விளக்கம் அளித்துள்ளது.

    உலக சுகாதார அமைப்பின் இணையதள பக்கத்தில், ஷாக்ஸ்கம் பள்ளத்தாக்கு, அக்ஷய் ஷின் பிராந்தியம் உள்ளிட்ட பகுதிகள், சீனாவின் அங்கமாக வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தன.

    இதற்கு மத்திய அரசு கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

    இந்தியாவுக்கும் சீனாவுக்கும் எல்லைப் பிரச்சனைகள் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட வரைபடம் சர்ச்சைகளையும் கண்டனங்களையும் கிளப்பியது.

    இதனையடுத்து இந்திய வரைபடத்துடன் பொறுப்புத் துறப்பு வாசகமாக உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்டதாவது:

    வரைபடத்தில், எந்த நாட்டையும் எல்லைகளையும் அல்லது பகுதியையும் முறையாக குறிக்கவில்லை. இந்த வரைபட விபரங்கள், உலக சுகாதார அமைப்பு வெளிப் படுத்தும் எண்ணங்களும் அல்ல. எந்த நாடுகளின் எல்லைகளையும் குறைத்து காட்டவேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடப்படவில்லை.

    வரைபடத்தில், புள்ளிகள் மற்றும் கோடுகளால் காட்டப்பட்டவை, தோராயமான எல்லை கோடுகள். இந்த கோடுகள், உண்மையான எல்லை பகுதிகளாக இல்லாமலும் இருக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: