38 மனைவிகள்: 89 குழந்தைகள்- உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் உயிரிழப்பு

சியோனா

உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவர் என்று நம்பப்படுபவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு 38 மனைவிகள் மற்றும் 89 குழந்தைகள் உள்ளன.

 • Share this:
  இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சியோனா சன்னா. அவருக்கு வயது 76. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த சியோனா சன்னாவுக்கு மொத்தம் 39 மனைவிகள் உள்ளனர். 89 குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு 33 பேரக்குழந்தைகளும் உள்ளனர். அவருக்கு முதல் திருமணம் 1959-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது அவருக்கு 17 வயது ஆகும். அவர், ஒரே வருடத்தில் 10 திருமணங்கள் வரைசெய்துள்ளார். இறுதியாக 2004-ம் ஆண்டு 25 வயது பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

  அப்போது அவருக்கு 60 வயது. நான்கு மாடிகள் கொண்ட பெரிய வீட்டில் அனைவரும் வசிக்கின்றனர். அந்த வீட்டில் 100 அறைகள் உள்ளன. சியோன்னாவுக்கு என்று தனியறை உள்ளது. அதற்கு அருகில் பள்ளி, கல்லூரி வகுப்பறைகள் போல பெரிய அறைகள் கொண்ட அறையில் அனைவரும் தங்குகின்றனர். அவர், எப்போது எட்டு மனைவிகளுடன் ஒன்றாக இருப்பார் என்று அண்டை வீட்டார் தெரிவித்தனர். இவர்கள் குடும்பம் குறித்து பி.பி.சி மற்றும் மிகவும் பிரபலமான ரிப்லேவின் நம்பினால் நம்புங்கள்(Believe It Or Not) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வந்துள்ளது. துணிதுவைக்கும் பவுடருக்கான விளம்பரத்திலும் அவரின் குடும்பம் வந்துள்ளது.

  சியோனாவின் இறுதிச் சடங்கில் மனைவி, குழந்தைகள்


  இதுகுறித்து 2014-ம் ஆண்டு சியன்னா ராய்டர்ஸுக்கு அளித்த பேட்டியில், ‘என்னுடைய குடும்பத்தை மேலும் விரிவாக்க நான் விரும்புகிறேன். திருமணம் செய்வதற்காக எந்த எல்லைக்கும் செல்வதற்கு தயாராக உள்ளேன். என்னை கவனித்துக்கொள்வதற்கு ஏராளமானோர் உள்ளனர். நான், என்னை அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

  இந்தியச் சட்டப்படி பலாதார மணம் தடை செய்யப்பட்ட ஒன்று என்றாலும், இந்தியாவில் சில பழங்குடி இனங்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சியோனாவின் மறைவு குறித்து அம்மாநில முதல்வர் சோரம்தங்கா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவில், ‘மிசோரம் மற்றும் பக்தவ்ங் ட்லங்நம் சிறந்த சுற்றுலாத் தளமாக உருவாவதற்கு சியோனாவின் குடும்பமும் முக்கியக் காரணம். அவர், மறைந்தது வருத்தத்தை தருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Karthick S
  First published: