ஹோம் /நியூஸ் /இந்தியா /

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துக்கு தடை... காரணம் என்ன?

பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்துக்கு தடை... காரணம் என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

PFI Banned: உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்படி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 அமைப்புகளும் சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு, நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

    கேரளாவில் இயங்கி வந்த தேசிய வளர்ச்சி முன்னணி(என்.டி.எஃப்), தமிழ்நாட்டின் மனித நீதிப் பாசறை, கர்நாடகாவைச் சேர்ந்த ஃபோரம் ஃபார் டிக்னிட்டி ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து 2007-ஆம் ஆண்டுபாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் இருந்து இந்த அமைப்பு மீது என்ஐஏ கண்காணித்து வந்தது. இவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து எப்படி பணம் வருகிறது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

    மேலும் வன்முறைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் ஒரு பேராசிரியரை படுகொலை செய்தது.தமிழ்நாட்டில் ராமலிங்கம் படுகொலை உள்ளிட்டவை இந்த அமைப்பின் மீது கூறப்பட்ட முக்கியக் குற்றச்சாட்டுகள்.

    Also Read: கருப்பாக இருப்பதாக கேலி செய்த கணவன்.. ஆணுறுப்பை வெட்டிய மனைவி.. சத்தீஸ்கரில் பயங்கரம்

    இந்த நிலையில் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் கடந்த 22ம் தேதி தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இரண்டாவது முறையாக செவ்வாய்கிழமை 8 மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

    மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதற்கு தொடர்புடைய அமைப்புகளான கேம்பஸ் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா, அனைத்திந்திய இமாம் கவுன்சில் உள்ளிட்ட அமைப்புகள், பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டை சேர்ந்த ராமலிங்கம், சசிகுமார், கர்நாடகாவை சேர்ந்த பிரவீன் நெட்டார் உள்ளிட்டோர் கொலை வழக்கில் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்பில் இருந்ததாக தெரிவித்துள்ள மத்திய அரசு, அந்த அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்ததுடன், சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கொல்லப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவில் பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக நிதி வசூல் செய்ததன் காரணமாகவும், இந்த அமைப்பை தடை செய்ய வேண்டும் என உத்தரபிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்கள் பரிந்துரைத்ததாக கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உபா எனப்படும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின்படி, பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதனுடன் தொடர்புடைய கேம்பஸ் பிரன்ட் ஆப் இந்தியா, தேசிய மனித உரிமைக் கழக கூட்டமைப்பு உள்ளிட்ட 8 அமைப்புகளும் சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்புகள் 5 ஆண்டுகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Banned, India, Tamil News