முகப்பு /செய்தி /இந்தியா / சர்வதேச பயணிகளின் விவரங்களை இனி அரசுக்கு தெரிவிப்பது கட்டாயம் - ஏன் தெரியுமா.?

சர்வதேச பயணிகளின் விவரங்களை இனி அரசுக்கு தெரிவிப்பது கட்டாயம் - ஏன் தெரியுமா.?

travelers

travelers

International Air Travel Guide | சர்வதேசப் பயணிகளின் விவரங்களை மத்திய வரி மற்றும் கலால் வரி ஆணையத்திடம் 24 மணி நேரத்திற்கு முன்பாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சர்வதேசப் பயணிகளின் விவரங்களை மத்திய வரி மற்றும் கலால் வரி ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மற்றும் டிராவல் ஏஜென்ஸிக்கள் ஆகியோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சர்வதேசப் பயணிகளின் புறப்பாடு மற்றும் வருகைக்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்தத் தகவலை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு, 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு தான். ஆனால், அதை அமல்படுத்துவதற்கான செயல்திட்டம் இப்போது தான் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானப் பயணிகளின் தகவல்களை சேகரிக்கும் திட்டம் உலகில் 60 நாடுகளில் அமலில் இருக்கிறது.

அரசு ஏன் விவரங்களை கேட்கிறது.?

சர்வதேசப் பயணிகளின் குற்ற அபாயத்தை ஆய்வு செய்வதற்காகத் தான் இந்த விவரங்களை அரசு சேகரிக்கிறது. உதாரணத்திற்கு ஒரு நிதி மோசடியைத் தொடர்ந்து வெளிநாடு செல்ல இருக்கும் பயணிகள் குறித்து இதன் மூலமாக கண்காணிக்க முடியும் என்று கருதப்படுகிறது.

சர்வதேசப் பயணிகளின் பேமெண்ட் முறைகள், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்டவற்றின் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்வதின் மூலமாக, சில பிரச்சினைகளைக் கண்டறிந்து அதற்கு தீர்வு காண முடியும் என்று கருதப்படுகிறது.

Also Read : டோலோ-650 மாத்திரைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

இந்த தரவுகளைக் கொண்டு, வரி செலுத்துபவர்களின் தரவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, தவறான ஐடிஆர் படிவங்களை தாக்கல் செய்பவர்களை நாட்டை விட்டு வெளியேறும் முன்பாக கண்டுபிடிக்க இயலும் என்று மத்திய அரசு கருதுகிறது. அதேபோன்று, வெளிநாடு செல்லும் பயணிகளின் விவரங்களை சேகரிப்பதன் மூலமாக பல்வேறு விதமான கடத்தல்களை தடுக்க முடியும் என்று கருதப்படுகிறது.

Also Read : 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ரயிலில் டிக்கெட் வாங்க வேண்டுமா.? ரயில்வே விளக்கம்

செயல்திட்டம் என்ன..

மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் இதுகுறித்த அறிவிக்கை கடந்த 8ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் முகவர்கள், பயணிகளின் விவரங்களை அரசுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பயணம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக இந்தத் தகவல் வர வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்தும் தேசிய பயணிகள் சுங்க விவகார மையத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்.
இது மத்திய கலால் மற்றும் வரி விதிப்பு ஆணையத்தின் கீழ் இயங்கும் அமைப்பாகும்.
பயணிகளின் குற்ற அபாயங்களை இது ஆராயும்.
பயணம், சென்று சேரும் இடம், பிஎன்ஆர், பேமெண்ட் முறை, லக்கேஜ், பாஸ்போர்ட், பாலினம் போன்ற விவரங்களை சிறப்பு படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
இந்த விவரங்கள் அனைத்திலும் ரகசியம் காக்கப்படும். சேகரிக்கப்பட்ட விவரங்களையும், ஐடிஆர் விவரங்களையும் ஒப்பிட்டு ஆய்வு செய்து, தவறு செய்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இத்திட்டம் உதவிகரமாக இருக்கும்.
First published:

Tags: Central government, Flight travel, India