இந்தியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரங்களை சர்வதேச ஊடகங்களுக்கு கொடுக்காதது ஏன்? என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார், இந்திய விமானப்படையின் எஸ்.யு-30 ரக விமானத்தை வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறுவது தவறு எனக் குறிப்பிட்டார்.
அபிநந்தனால் சுட்டு வீழ்த்தப்பட்ட எப்-16 ரக விமானத்தின் சாட்சியங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் இந்தியாவிடம் உள்ளன என்றும் விமானத்தை இழந்த பாகிஸ்தான், அதனை மறைக்க தவறான தகவலை பரப்புவதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்தியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான வீடியோ ஆதாரங்கள் இருந்தால் அதை ஏன் சர்வதேச ஊடகங்களுக்கு அளிக்கவில்லை என கேள்வி எழுப்பிய ரவீஷ் குமார், எப்-16 ரக விமானத்தை தவறாக பயன்படுத்தியது குறித்து ஆய்வு செய்யுமாறு அமெரிக்காவிடம் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி மசூத் அசார் பாகிஸ்தானில் இல்லை எனக்கூறுவது வருத்தமளிக்கிறது என்றும் பயங்கரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வருவது குறித்து பிரிட்டன் அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ரவீஷ் குமார், இதுவரை பிரிட்டன் அரசிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை எனக் குறிப்பிட்டார்.
Also see... ஆல் இன் ஆல் அரசியல் | 08-03-2019
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.