• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல்

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நுழைந்து இந்திய விமானப்படை தாக்குதல்

கோப்புப் படம்

கோப்புப் படம்

எல்லையை தாண்டி இந்திய போர் விமானங்கள் ஊடுருவியதாகவும், பாகிஸ்தான் விமானப்படை அதனை விரட்டியடித்ததாகவும் அந்நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பால்கோட் என்ற பகுதியில் இந்திய போர் விமானங்கள் நுழைந்து பயங்கரவாதிகள் முகாமில் தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 41 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற இயக்கம் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உளவுத்துறை மற்றும் நிர்வாகத்தோல்வியே வீரர்கள் மரணத்திற்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இரு நாட்டு எல்லைப்பகுதியில் பதற்ற நிலை நீடித்தே வந்தது.

இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

அதிகாலை 3.30 மணிக்கு 12 மிராஜ் ஜெட் விமானங்கள் எல்லை தாண்டிச்சென்று சுமார் 1000 கிலோ வெடிகுண்டை பயங்கரவாதிகள் முகாம் மீது வீசி அவை முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

எனினும், எல்லையை தாண்டி இந்திய போர் விமானங்கள் ஊடுருவியதாகவும், பாகிஸ்தான் விமானப்படை அதனை விரட்டியடித்ததாகவும் அந்நாட்டு ராணுவ செய்தித்தொடர்பாளர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



Also See...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: