முகப்பு /செய்தி /இந்தியா / இந்திய ரசிகரின் செயலால் ஷாக் ஆன மியா கலிஃபா!

இந்திய ரசிகரின் செயலால் ஷாக் ஆன மியா கலிஃபா!

mia khalifa

mia khalifa

மியாவின் ரீயாக்‌ஷன் இந்திய ரசிகர் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய ரசிகர் ஒருவர் செய்த செயல் பார்ன் ஸ்டார் மியா கலிஃபா அதிர்ந்துள்ளார்.

மியா கலிஃபா - உலகளவில் மிகவும் பிரபலமானவர், இவரைப்பற்றி தெரியாதவர்களுக்கு, இவை அறிமுகப்படுத்த ஒரு சின்ன விஷயம் சொல்வதென்றால், இவர் நம்மூர் ஷகிலா போல... ஆம் இவர் செக்ஸ் படங்களில் நடித்து இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தவர். பார்ன் படங்களில் நடித்தவர்களிலேயே அதிகளவில் பார்க்கப்பட்டவர் இவர் தான். லெபானானிலிருந்து அமெரிக்காவில் குடியேற இவருக்கு உலகம் முழுவதும் சிறியவர் தொடங்கி பெரியவர்கள் வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.

இந்நிலையில் மியாவின் ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் செய்த செயல் மியாவை அதிரச் செய்துள்ளது. ஒருவரை பிடிக்கும் என்றால் அதிகபட்ச அளவாக அவரின் பெயரை பச்சை குத்தி கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் மியாவின் ரசிகர் ஒருவர் ஒரு படி மேலே சென்று மியா கலிஃபாவின் முகத்தையே டாட்டூ போட்டிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் tattoo_artist_01 என்ற கணக்கை கொண்டிருக்கும் மியா கலிஃபாவின் இந்திய ரசிகர், மியாவின் முகத்தை தனது காலில் டாட்டூ போட்டிருக்கிறார். அவருடைய இன்ஸ்டா பக்கத்தில் இதனை வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டுள்ளார்..




 




View this post on Instagram





 

A post shared by Arjun tattooz (@tattoo_artist_01)



மியாவின் புகைப்படத்துடன் தொடங்கும் அந்த வீடியோ பின்னர் ஒருவருடைய காலை காட்டுகிறது. அதில் மியாவின் புகைப்படத்தை அவர் டாட்டூ செய்திருக்கிறார்.

Also Read: இலவச வைஃபைக்கான பாஸ்வோர்டை கண்டறிய உணவகம் வைத்த சவால்!

இந்த வீடியோவானது, மியா கலிஃபாவின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அவரும் இந்த வீடியோவை தனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஆனால் மியாவின் ரீயாக்‌ஷன் இந்திய ரசிகர் எதிர்பார்ப்புக்கு மாறாக இருந்தது. இது மிகவும் கொடூரமானது என கூறி அதற்கேற்றவாறு ஒரு எமோஜியையும் பதிவிட்டு தனக்கு இதில் விருப்பம் இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார் அவர்.

மியாவின் பதில் அந்த இந்திய ரசிகரை பெரிதும் காயப்படுத்தவில்லை, தனது அடுத்த பதிவிலேயே அவர் மியாவுக்கு நன்றி தெரிவித்து பதிலளித்திருப்பதுடன் அந்த வீடியோவை 4 மில்லியன் பேர் பார்த்திருப்பதாகவும், அவர்களுக்கும் எனது நன்றி என கூறியுள்ளார்.




 




View this post on Instagram





 

A post shared by Arjun tattooz (@tattoo_artist_01)



மியா கலிஃபாவின் அடையாளமாக விளங்கும் மூக்குக் கண்ணாடியை, கடந்த ஆண்டு லெபானானில் நடந்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் அவர் ஏலத்தில் விட்டார். மியாவின் கண்ணாடி ஒரு லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இது இந்திய மதிப்பில் 73 லட்ச ரூபாய் ஆகும். முன்னதாக அவர் பல்வேறு வகைகளில் 1.17 கோடி ரூபாயை நிதி திரட்டி லெபனான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Mia Khalifa, Porn websites