ஆண்டுதோறும் பிப்ரவரி 1-ஆம் தேதி இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய கடலோர காவல்படை (ICG - Indian Coast Guard) பிப்ரவரி 1-ஆம் தேதியான இன்று தனது 46-வது எழுச்சி தினத்தை கொண்டாடுகிறது. உலகின் நான்காவது பெரிய கடலோர காவல்படையாக இருக்கும் இந்திய கடலோர காவல்படை கடந்த 1977-ல் நிறுவப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 10,000-ற்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றி உள்ளது. 1978-ல் வெறும் ஏழு சர்ஃபேஸ் பிளாட்ஃபார்ம்களில் இருந்து தொடங்கப்பட்ட இந்திய கடலோர காவல்படையானது (ICG) தற்போது 158 கப்பல்கள் மற்றும் 70 விமானங்களைக் கொண்ட ஒரு வல்லமைமிக்க சக்தியாக வளர்ந்து நிற்கிறது.
வரும் 2025-ஆம் ஆண்டிற்குள் ICG 200 சர்ஃபேஸ் பிளாட்ஃபார்ம்கள் மற்றும் 100 ஏர்கிராஃப்ட் என்ற இலக்கு படை நிலைகளை அடைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. உலகின் நான்காவது பெரிய கடலோரக் காவல்படையாக இருக்கும் இந்திய கடலோர காவல்படை, இந்திய கடலோரப் பகுதி மற்றும் எல்லைகளை பாதுகாப்பதிலும், இந்தியாவின் கடல்சார் மண்டலங்களில் கட்டுப்பாடுகளை செயல்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
வெள்ளம், சூறாவளி மற்றும் பிற இயற்கை பேரிடர்களின் போது சிவில் அதிகாரிகளுக்கு இந்திய கடலோர காவல்படை பெரும் உதவிகளை வழங்கி உள்ளது. கோவிட் -19 தொற்று காரணமாக விதிக்கப்பட்ட பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ICG பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் தினசரி சுமார் 50 கப்பல்கள் மற்றும் 12 விமானங்களை நிலைநிறுத்தியதன் மூலம் 24 மணிநேர கண்காணிப்பை தொடர்ந்து செய்து வந்தது.
இதையும் படியுங்கள் : வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்டம்: விவசாய அமைப்புகள் அறிவிப்பு
இதனிடையே கடலோர காவல்படை தினம் நாட்டின் கடல் பரப்பை கண்காணிப்பதன் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தும் படைகளின் பணியை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு இந்தியா 46-வது இந்திய கடலோர காவல்படை தினத்தை அனுசரிக்க்கும் நிலையில், கடலோர காவல்படை தன்னார்வத் தொண்டு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை நடத்துதல் மற்றும் நமது நாட்டின் எல்லைகளைக் காத்தல் போன்ற முக்கிய பொறுப்புகளை சிறப்பாக செய்து வருகிறது.
இந்திய கடலோர காவல்படை தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்:

Indian Coast Guard Day 2022
இந்திய ஆயுதப் படையின் துணைப்பிரிவான இந்திய கடலோர காவல்படையின் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக 1978-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆண்டுதோறும் இனி பிப்ரவரி 1-ஆம் தேதி இந்திய கடலோர காவல்படை தினம் கொண்டாடப்படும் என்று இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கடல்வழி கடத்தல்களை தடுக்க இடைக்கால இந்திய கடலோரக் காவல்படை பிப்ரவரி 1, 1977-ல் நிறுவப்பட்டது. ICG இதுவரை 10,000-க்கும் மேற்பட்ட உயிர்களை காப்பாற்றியுள்ளதோடு 14,000-ற்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்துள்ளது.
இதையும் படியுங்கள் : சூப்பர் மார்க்கெட்டில் ஓயின் விற்பனை: அரசின் முடிவுக்கு அண்ணா அசாரே விமர்சனம்
இந்திய கடலோர காவல்படையின் பணியானது பல துறைகளுக்கு ஏற்ப மாறுபடும். இந்த அமைப்பு பல பணிகளுக்காக செயல்படுகிறது. மேலும் இது இந்திய கடற்படை, சுங்கத் துறை மற்றும் காவல்துறை உள்ளிட்டவற்றுடன் பரஸ்பரம் ஒத்துழைப்பு பெற்று செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் வடமேற்கு பகுதி குஜராத்தின் காந்திநகரில் அமைந்துள்ளது. ICG-ன் கிழக்கு மண்டலம் சென்னையிலும், கொல்கத்தா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் பகுதிகளில் வடகிழக்கு மண்டலமும் உள்ளது.
கருப்பொருள்:

Indian Coast Guard Day 2022
தற்போது இந்திய கடலோர காவல்படைக்கு 156 கப்பல்கள் மற்றும் 62 விமானங்கள் உள்ளன. 2025 ஆம் ஆண்டிற்குள் 200 கப்பல்கள் மற்றும் 100 இரட்டை எஞ்சின் கொண்ட விமானங்களை உருவாக்க இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது. ICG ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளை தேர்ந்தெடுக்கிறது, ஆனால் இந்த ஆண்டுக்கான கருப்பொருள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.