ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் புதிய சலுகை - சவுதி அரசு அதிரடி அறிவிப்பு

இந்தியர்களுக்கு விசா வழங்குவதில் புதிய சலுகை - சவுதி அரசு அதிரடி அறிவிப்பு

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

சவுதி அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருந்து சவுதிக்கு வேலைக்கு விண்ணப்பிப்போரின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Delhi, India

  சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக விசா கோரி விண்ணப்பிக்கும் இந்தியர்கள், காவல் துறையின் தடையில்லா சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-வுக்கும், சவுதி அரேபியா-வுக்கும் இடையே வலுவான நல்லுறவு இருந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதனை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சவுதி அரேபியாவுக்கு செல்வதற்காக விசா கோரி விண்ணப்பிக்கும் இந்தியர்கள், இனிமேல் காவல் துறையின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியதில்லை என்று முடிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் அமைதியான முறையில் வாழும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய குடிமக்களின் பங்களிப்பை வரவேற்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

  சவுதி அரசின் இந்த அறிவிப்பின் மூலம் இந்தியாவில் இருந்து சவுதிக்கு வேலைக்கு விண்ணப்பிப்போரின் காத்திருப்பு காலம் வெகுவாக குறையும். அவர்களின் விண்ணப்பம் துரிதமாக பரிசீலிக்கப்பட்டு விசா விரைந்து வழங்கப்படும்.

  இதையும் படிங்க: 3,000 இந்திய இளைஞர்களுக்கு விசா வழங்கப்படும்.. பிரதமர் மோடி சந்தித்த கையோடு பிரிட்டன் பிரதமர் அறிவிப்பு

  அதேபோல, சுற்றுல விசா பெற விரும்புபவர்களும் இது தொடர்பான ஆவணங்களை  இனி செலுத்த வேண்டியதில்லை என்பதால் அவர்களுக்கான சுமை குறைந்துள்ளது. இந்த அறிவிப்பை டெல்லியில் உள்ள சவுதி அரேபிய தூதரகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: India, Saudi Arabia