சென்னை, தூத்துக்குடி உட்பட 12 இந்திய நகரங்கள் கடலுக்குள் மூழ்கும்: நாசா எச்சரிக்கை

கோப்புக் காட்சி

2100ம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக தமிழகத்தின்  தலைநகர் சென்னை 1.87 அடியும் மற்றொரு மாவட்டமான தூத்துக்குடி 1.9 அடியும் கடலில் மூழ்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது

 • Share this:
  2100ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 12 கடற்கரையோர நகரங்கள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

  காலநிலை மாற்றங்களுக்கான பன்னாட்டு அரசாங்கங்களின் குழுவான ஐ.பி.சி.சி (IPCC)  தனது ஆய்வு அறிக்கையை நேற்று ஜெனிவாவில் தாக்கல் செய்திருந்தது. Climate Change 2021: the Physical Science Basis எனப் பெயரிடப்பட்ட அந்த  அறிக்கையில் எதிர்காலத்தில் ஏற்படப் போகும் பருவநிலை மாற்றங்கள், பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலை உள்ளடக்கிய இந்திய பெருங்கடல் பூமியின் சராசரியை விட வேகமாக வெப்பமாகி வருவதாகவும்,  கடற்கரையோர பகுதிகளில் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் ஐ.பி.சி.சி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  மேலும் தெரிந்துள்ள: இந்தியாவில் ஏற்படப்போகும் பாதிப்புகள்- ஐ.பி.சி.சி அறிக்கையில் கூறியிருப்பது என்ன?


  ஐபிசிசி  அறிக்கையின் அடிப்படையில் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா அலசியது. அதன் முடிவுகளையும் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி,  இந்தியாவில் கடற்கரையை ஒட்டியுள்ள 12 நகரங்கள் 2100ம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கும் என தெரிவித்துள்ளது.

  இதையும் படிங்க: 2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் - ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!


  2100ம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் உயர்வு காரணமாக தமிழகத்தின்  தலைநகர் சென்னை 1.87 அடியும் மற்றொரு மாவட்டமான தூத்துக்குடி 1.9 அடியும் கடலில் மூழ்கக்கூடும் என்று நாசா தெரிவித்துள்ளது.  இதேபோல்,
  * கண்ட்லா, குஜராத் - 1.87 அடி

  * ஒக்ஹா, குஜராத் - 1.96 அடி

  * பவுநகர், குஜராத் - 2.70 அடி

  * மும்பை, மகாராஷ்டிரா- 1.90 அடி

  * மோர்முகாவ், கோவா - 2.06 அடி

  * மங்களூர், கர்நாடகா - 1.87 அடி

  * கொச்சி, கேரளா - 2.32 அடி

  * பரதீப், ஒடிசா- 1.93 அடி

  * கிதிர்பூர், கொல்கத்தா - 0.49 அடி

  * விசாகப்பட்டினம், ஆந்திரா - 1.77 அடி


  ஆகிய நகரங்களும் கடலுக்குள் மூழ்கும் அபாயம் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

  Published by:Murugesh M
  First published: