ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரியல் ஹீரோக்களை திருமணத்துக்கு அழைத்த கேரள புதுமண தம்பதி - இன்ஸ்டாவில் வாழ்த்திய இந்திய இராணுவம்..

ரியல் ஹீரோக்களை திருமணத்துக்கு அழைத்த கேரள புதுமண தம்பதி - இன்ஸ்டாவில் வாழ்த்திய இந்திய இராணுவம்..

இந்திய இராணுவத்திற்கு அனுப்பிய குறிப்பு

இந்திய இராணுவத்திற்கு அனுப்பிய குறிப்பு

இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்திய இராணூவம், “உங்களின் திருமணத்திற்கு இந்திய இராணுவத்தை அழைத்ததற்கு உங்களுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம்” என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளாவை சேர்ந்த புதுமண தம்பதி ராகுல் - கார்த்திகா. இவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி திருமணமானது. இவர்கள், இந்திய இராணுவத்திற்கு தங்களின் திருமண பத்திரிக்கையை அனுப்பி, தங்களின் திருமணத்திற்கு நேரில் வந்து தங்களை வாழ்த்த, இந்திய இரானுவத்திற்கு பத்திரிக்கையுடன் ஒரு குறிப்பை சேர்த்து அனுப்பியுள்ளனர்.

  அந்த குறிப்பில், “நாங்கள் இருவரும் நவம்பர் 10ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம். உங்களின் தியாகத்திற்கும் நாட்டுப்பற்றுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். நீங்கள் என்றும் எங்களை பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். உங்களால் தான் நாங்கள் நிம்மதியாக தூங்குகிறோம்.

  எங்கள் அன்பிற்குறியவர்களிடம் நாங்கள் நாட்களை செலவிடுவதற்கு நீங்கள் தான் காரணம். உங்களால் தான் நாங்கள் மகிழ்ச்சியாக திருமணம் செய்துகொள்ளவிருக்கிறோம். உங்களை எங்களின் முக்கியமான நாளில் அழைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். நிச்சயம் நீங்கள் வர வேண்டும். அன்புடன் ராகுல் மற்றும் கார்த்திகா” என எழுதி அனுப்பியுள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by Indian Army (@indianarmy.adgpi)  இதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்திய இராணூவம், “உங்களின் திருமணத்திற்கு இந்திய இராணுவத்தை அழைத்ததற்கு உங்களுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம். மேலும், உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதற்கு வாழ்த்துகிறோம்” என வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிக்க : 10,000 ஒரு ரூபாய் நாணயங்களை டெபாசிட்டாக செலுத்திய சுயேட்சை வேட்பாளர்.. மிரண்டு போன தேர்தல் அலுவலர்

  இதற்கு பலரும் கருத்துரை பதிவில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஒருவர், அந்த சிவப்பு நிறத்தில் குறிக்கப்பட்டிருப்பது முற்றிலும் உண்மையானது என தெரிவித்துள்ளார். மற்றொருவர், உண்மையான ஹீரோக்களை அழைத்ததற்கு நன்றி என பதிவிட்டுள்ளார். இன்னொருவர் இந்த பதிவை பார்த்த பிறகு எனது நாள் அழகாக மாறியுள்ளது என பதிவிட்டிருக்கிறார்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Indian army, Kerala, Marriage, Wedding plans