ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்திய ராணுவத்தில் தற்போது முக்கிய சீர்திருத்தங்கள் - ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேச்சு

இந்திய ராணுவத்தில் தற்போது முக்கிய சீர்திருத்தங்கள் - ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பேச்சு

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே

ராணுவ தளபதி மனோஜ் பாண்டே

தற்சார்பு இந்தியா என்பதை மையமாகக் கொண்டு இந்த மாற்றங்கள் நடைபெற்று வருகிறது என ராணுவ தளபதி பேசியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  இந்திய ராணுவத்தில் முக்கியமான சீர்திருத்தங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன என ராணுவத் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.

  தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில் விமானப் படை அகாடமியில் தேர்ச்சி பெற்ற வீரர்களின் அணிவகுப்பில் ராணுவத் தளபதி ஜென்ரல் மனோஜ் பாண்டே கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய தளபதி மனோஜ் பாண்டே, 'செயற்கை நுண்ணறிவு, ஹைப்பர்சோனிக், ரோபோட்டிக்ஸ் போன்ற நவீன வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தற்போது ஏடுகளில் ஆய்வாக மட்டுமில்லை. மாறாக இவை நடைமுறையில் செயல்படத் தொடங்கி, போர்க்களங்களிலும் தீர்மான சக்திகளாக மாறியுள்ளன.

  இந்தியாவின் பாதுகாப்பு நலன் மற்றும் சவால்கள் என்பது எல்லைப் பகுதிகளில் மட்டுமல்லாது, உள்நாட்டு பாதுகாப்பும் அதே அளவிற்கான சவால்களை கொண்டுள்ளது. எனவே, பாதுகாப்பு படையினர் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டியது அடிப்படை தேவைகளாக மாறியுள்ளது. இந்திய ராணுவம் என்பது மாபெரும் சீர்திருத்தங்களை தற்போது கண்டுவருகிறது. புதிதாக தேர்ச்சி பெற்று வெளியேறும் இளம் வீரர்களாகிய நீங்கள்தான் இந்த மாற்றங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும். குறிப்பாக, தொழில்நுட்பத்துடன் சேர்த்து, மனித வளத்திலும் இந்தியா ராணுவம் முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. தற்சார்பு இந்தியா என்பதை மையமாகக் கொண்டு இந்த மாற்றங்கள் நடைபெற்று வருகிறது' என்றார்.

  இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் மட்டும் போதும்.. குடியரசுத் தலைவர் பொறுப்பு வேண்டாம்.. கைவிரித்தார் பரூக் அப்துல்லா

  பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் பாதுகாப்புத்துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தில் கீழ் பணிவாய்ப்பு பெறும் இளைஞர்களின் பணிக்காலம் நான்கு ஆண்டுகள் எனவும், திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவோரில் 25 சதவீதத்தினருக்கு மட்டுமே ராணுவப் பணியில் தொடர வாய்ப்பு என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மீதமுள்ள 75 சதவீதத்தினர் பணியில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்ட நிலையில் இந்த திட்டத்திற்கு எதிராக பீகார்,ஹரியானா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பீகார் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இணைய சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Air force, Army jobs, Indian army