மனிதர்கள் தங்கள் முதுகில் சூட் பேக்கை அணிந்து கொள்ளலாம். அந்த பையில் காற்றை வேகமாக கீழே தள்ளும் அமைப்புகள் இருக்கும். ஜெட் சூட்டை இயக்கும் போது ஃபோர்சாக காற்று கீழ் நோக்கி வரும். அப்போது புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஜெட் சூட் அணிந்திருக்கும் நபர் காற்றைக் கிளித்துக் கொண்டு வான் நோக்கி பறக்கலாம். பறக்கும் போது திசை மாற்றுவதற்கும், சுழல்வதற்குத் தனி அமைப்புகள் ஜெட் பேக்கில் உள்ளன. இந்த ஜெட் பேக்-பைகளை இங்கிலாந்தை சேர்ந்த கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிறுவுனர் ரிச்சர்ட் பிரவுனிங் என்பவர் தான் இந்த சூட்டை கண்டுபிடித்து அசத்தியவர். அவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்ராவில் உள்ள இந்தியன் ஏரோஸ்பேஸ் பயிற்சி நிறுவனத்தில் இந்த ஜெட் சூட்களை டெமோ செய்து காண்பித்துள்ளார். கிராவிட்டி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் ரிச்சர்ட் பிரவுனிங் சமீபத்தில் ஆக்ராவில் இருக்கும் நீர்நிலைகள், கட்டிடங்கள் மற்றும் வயல்களின் மீது இந்த ஜெட்பேக்-ன் செயல் திறனை விளக்கினார்.
ஜெட் சூட்டில் பறப்பதற்கு வாயு அல்லது திரவ எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பொருட்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். மேலும், ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக பயணிக்கவும் இது உதவும்.
Yesterday, Richard Browning the founder of #Gravity Industries gave a demo of their #Jetpack system to the Indian Army in #Agra.
The #IndianArmy has issued the requirement to procure 48 such systems.#IADN pic.twitter.com/0dcEW3hjyb
— Indian Aerospace Defence News (IADN) (@NewsIADN) February 28, 2023
தற்போது இதுகுறித்து ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள் ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ வான்வழி பயிற்சி பள்ளியில் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் இந்திய ராணுவம் 48 ஜெட் பேக் சூட்களை வாங்குவதற்கான அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் அதிகபட்சமாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் 80 பேலோடுடன் பறக்கக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும், பாலைவனம், மலை மற்றும் 3,000 மீ உயரம் வரை உயரமான சூழ்நிலைகளில் செயல்படும் திறன் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான் கிராவிட்டி நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் ப்ரௌனிங், ‘ஆக்ராவில் உள்ள இந்திய ராணுவ பயிற்சிப் பள்ளியில் இந்த உடை குறித்த டெமோ செய்து காண்பித்தார். மேலும் இந்திய எல்லைப் பகுதியில் ஏற்படும் பதற்றங்களைத் தவிர்க்கவும், ராணுவத்தின் அவசரக்கால போக்குவரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லவும் இது பயன்படும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
செய்தியாளர்: ரொசாரியோ ராய்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Indian army