Home /News /national /

கொரோனா பாதிப்பால் பாதுகாப்பு படையினர் 190 பேர் உயிரிழப்பு - நாடாளுமன்றத்தில் தகவல்

கொரோனா பாதிப்பால் பாதுகாப்பு படையினர் 190 பேர் உயிரிழப்பு - நாடாளுமன்றத்தில் தகவல்

கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு, தடுப்பு பணியில் ராணுவம் தீவிரமாக பணியாற்றியது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு, தடுப்பு பணியில் ராணுவம் தீவிரமாக பணியாற்றியது.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு, தடுப்பு பணியில் ராணுவம் தீவிரமாக பணியாற்றியது.

    கொரோனா பாதிப்பு காரணமாக பாதுகாப்பு படையினர் 190 பேர் உயிரிழந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 137 பேர் தரைப்படையை சேர்ந்தவர்கள்.

    கொரோனா மரணம் குறித்து எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் பதில் அளித்துள்ளார். அதன் விபரம்-

    கொரோனா பேரிடர் காலத்தின்போது ராணுவத்தின் தரைப்படையில் 45,576 பேருக்கும், விமானப்படையில் 14,022 பேருக்கும், கடற்படையில் 7,747 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினர் 1,311 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 114 பேர் விமானப்படையில் பணியாற்றுவோரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

    Also read :  தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அனுமதிக்கும் திரையரங்குகளுக்கு சீல்

    ராணுவத்தால் நடத்தப்படும் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பொதுமக்களில் 276 பேர் உயிரிழந்துள்ளனர். விதிமுறைப்படி தொற்று நோயால் உயிரிழந்தவர்களுக்கு சிறப்பு இழப்பீடு ஏதும் அளிக்கப்படவில்லை. ஆனால் பணியின் போது உயிரிழந்தால் கிடைக்கும் பலன்கள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    Also Read : ஒமைக்ரான் உலகளவில் மிக அதிக ஆபத்தை ஏற்படுத்தும் - WHO எச்சரிக்கை

    இவ்வாறு அமைச்சர் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு இந்தியாவில் ஆரம்பித்த நேரம் முதற்கொண்டு, தடுப்பு பணியில் ராணுவம் தீவிரமாக பணியாற்றியது. சிறப்பு மருத்துவ முகாம்கள், தனிமைப்படுத்தும் முகாம்கள் அமைத்தல், ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை ராணுவத்தினர் மேற்கொண்டனர்.

    நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் ராணுவ மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராணுவத்திற்கு சொந்தமான விமான தளங்கள், கப்பல்கள் உள்ளிட்டவை கொரோனா தடுப்பு மருந்து பொருட்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டுகளை கையாள பயன்படுத்தப்பட்டன.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona death, Indian army

    அடுத்த செய்தி