• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்திய எல்லையில் 140 தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம் - ராணுவ அதிகாரி தகவல்

இந்திய எல்லையில் 140 தீவிரவாதிகள் ஊடுருவ திட்டம் - ராணுவ அதிகாரி தகவல்

இந்தியா-பாகிஸ்தான் எல்லை

இந்தியா-பாகிஸ்தான் எல்லை

தீவிரவாதிகள் எப்போது வேண்டுமானாலும் காஷ்மீருக்குள் ஊடுருவலாம்.

  • Share this:
    பாகிஸ்தான் ஏவுதளங்களில் இருந்து சுமார் 140 தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ தயாராக இருப்பதை ராணுவம் கவனித்து வருகிறது என இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்தியா பாகிஸ்தானுடனான நட்புறவு புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பின்னடைவை சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் தீவிர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டு அமைதிக்கு வழிவகை செய்தன.

    இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் போதும், காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர், “பாகிஸ்தான் ஏவுதளங்களில் இருந்து சுமார் 140 தீவிரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதை ராணுவம் கவனித்து வருகிறது.

    அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காஷ்மீருக்குள் ஊடுருவலாம். பயங்கர தாக்குதலை நடத்த அவர்கள் உயரமான குகைப் பகுதிகளில் பதுங்கியுள்ளனர். அவர்கள் காஷ்மீர் மண்ணின் மக்களையும் வன்முறைக்குத் தூண்டி வருகிறார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    Must Read : நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

    மேலும், “கடந்த ஆண்டு இந்திய ராணுவத்தினரால் தகர்த்து அழிக்கப்பட்ட தீவிரவாத கட்டமைப்புகளை பாகிஸ்தான் மறுசீரமைப்பு செய்து வருகிறது. பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் இந்திய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அஞ்சி, ஊடுருவல் முயற்சியில் இதுவரை ஈடுபடவில்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், தீவிரவாதிகளின் நடமாட்டம் முற்றிலுமாக குறைந்துள்ளது. அவர்கள் மலைப்பகுதிகளில் உள்ள குகைகளில் மட்டுமல்லாது மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளிலும் தஞ்சம் அடைந்திருக்கக் கூடும்” என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: