Home /News /national /

மின்வாரிய ஊழியர்கள் ஸ்ட்ரைக்... களத்தில் இறங்கி மின்சாரத்தை மீட்டெடுத்த இந்திய ராணுவம்

மின்வாரிய ஊழியர்கள் ஸ்ட்ரைக்... களத்தில் இறங்கி மின்சாரத்தை மீட்டெடுத்த இந்திய ராணுவம்

எல்லை பாதுகாப்பு, பேரிடர் என எல்லாவற்றிலும் முன்னால் நிற்கும் இந்திய ராணுவம், தற்போது மின்சாரத்தை மீட்டெடுப்பதிலும் முத்திரை பதித்துள்ளது.

எல்லை பாதுகாப்பு, பேரிடர் என எல்லாவற்றிலும் முன்னால் நிற்கும் இந்திய ராணுவம், தற்போது மின்சாரத்தை மீட்டெடுப்பதிலும் முத்திரை பதித்துள்ளது.

எல்லை பாதுகாப்பு, பேரிடர் என எல்லாவற்றிலும் முன்னால் நிற்கும் இந்திய ராணுவம், தற்போது மின்சாரத்தை மீட்டெடுப்பதிலும் முத்திரை பதித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ததன் காரணமாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று களத்திற்கு வந்த இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பணியாளர்கள் மின்சாரத்தை மீட்டெடுத்தனர்.

    தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு, ஊதிய விவகாரம் உள்ளிட்டவை தொடர்பாக ஜம்மு காஷ்மீரில் மின்வாரிய பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மாநிலத்தில் நேற்று முதற்கொண்டு மின்சாரம் பாதிப்பு ஏற்பட்டது.



    இதையடுத்து, தேவையான உதவிகளை மேற்கொண்டு மின்சாரத்தை மீட்டெடுக்குமாறு இந்திய ராணுவத்திற்கு, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று, இந்திய ராணுவத்தின் பொறியியல் பணியாளர்கள், களத்தில் உடனடியாக இறங்கினர்.

    அவர்களின் அதிரடி நடவடிக்கை காரணமாக மின்சாரம் உடனடியாக மீட்டெடுக்கப்பட்டது. எல்லை பாதுகாப்பு, பேரிடர் என எல்லாவற்றிலும் முன்னால் நிற்கும் இந்திய ராணுவம், தற்போது மின்சாரத்தை மீட்டெடுப்பதிலும் முத்திரை பதித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளனர்.



    இதற்கிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களிடம், அவர்களது கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் அவர்கள் வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற்றுக் கொள்வார்கள் என்றும் மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே. சிங் தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க : ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைக்க வலியுறுத்தும் தேர்தல் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

    இன்றைக்கு மின்வாரிய ஊழியர்களின் அகில இந்திய சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மின்வாரிய ஊழியர்களுக்கு ஆதரவாக இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக மனுக்களை, ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னருக்கு அனுப்ப வேண்டும் என்று அகில இந்திய மின்சார பணியாளர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

    இதையும் படிங்க : கல்வியில் மீண்டும் இந்தியா முதன்மை நிலையை அடைய வேண்டும் - வெங்கையா நாயுடு

    ஜம்மு காஷ்மீரில் சுமார் 20 ஆயிரம் மின்சார வாரிய பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளார்கள். கடந்த வெள்ளி இரவு முதல் இந்த போராட்டம் நடந்து வருகிறது. கோரிக்கை ஏற்கப்படும் வரையில், பழுது நீக்குதல் உள்பட எந்தப் பணியையும் மேற்கொள்ள மாட்டோம் என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

    இதையும் படிங்க : தனது வீட்டின் அருகில் அடிபட்டு விழுந்து கிடந்த அரிய வகை அமெரிக்க ஆந்தையை வனத்துறையிடம் ஒப்படைத்த நபர்!
    Published by:Musthak
    First published:

    Tags: Indian army

    அடுத்த செய்தி