Home /News /national /

பிரிட்டிஷ் காலனித்துவ நடைமுறைகளை மறுஆய்வு செய்து மாற்றும் இந்திய ராணுவம்!

பிரிட்டிஷ் காலனித்துவ நடைமுறைகளை மறுஆய்வு செய்து மாற்றும் இந்திய ராணுவம்!

காலனித்துவ நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் ராணுவம்

காலனித்துவ நடைமுறைகளை மறுஆய்வு செய்யும் ராணுவம்

சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் கழித்தும் பழைய காலனித்துவ முறையே தொடர்கிறது. அவற்றை மறுபரிசீலனை செய்ய இருக்கிறோம் - இந்திய ராணுவம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
பிரிட்டிஷ் காலனித்துவ பாரம்பரியத்தை விட்டு விலக இந்திய இராணுவம் அதன் பழக்கவழக்கங்கள், பழமையான நடைமுறைகள், விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை மறுஆய்வு செய்யத் தொடங்கியுள்ளது. அலகுகள் மற்றும் படைப்பிரிவுகளின் பெயர்களும் மதிப்பாய்வு செய்யப்பட உள்ளது.

இந்திய ராணுவம் சார்பில் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரிட்டிஷ் காலனித்துவ பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள், இராணுவ சீருடைகள், ஒழுங்குமுறைகள், சட்டங்கள், விதிகள், கொள்கைகள், அலகுகள், காலனித்துவ நிறுவனங்கள், கட்டிடங்கள், நிறுவனங்கள், சாலைகள், பூங்காக்கள், அலகுகளின் ஆங்கிலப் பெயர்களை கொண்டுள்ளது.

சுதந்திரம் பெற்று இவ்வளவு காலம் கடந்தும் அதுவே தொடர்கிறது. அவற்றை மறுபரிசீலனை செய்ய இருக்கிறோம். காலனித்துவ நடவடிக்கைகளை மாற்றி இந்திய முறைப்படி வைக்க இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.

இரண்டரை ஆண்டுகளுக்கு பின் இந்திய- பூட்டான் எல்லை கதவுகள் மீண்டும் திறப்பு.. களைகட்ட இருக்கும் சுற்றுலாதலங்கள்!

கெளரவ கமிஷன்கள் அமைப்பு, வீரத்திற்கான விருதுகள் , அவற்றிக்கான விழா நடைமுறைகளையும் இராணுவம் மதிப்பாய்வு செய்யும். பழமையான மற்றும் பயனற்ற நடைமுறைகளிலிருந்து விலகிச் செல்வது அவசியம் என்றார் ராணுவ அதிகாரி ஒருவர்.

யூனிட், க்ரெஸ்ட் காலனித்துவ காலத்தின் பெயர்கள் கொண்டு இருக்கின்றன. அதே போல் ராணுவத்தின் சின்னங்கள், அதிகாரிகளின் உணவக நடைமுறைகள், மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களும் மதிப்பாய்வு செய்யப்படும்.

இந்திய இராணுவத்தின் கூற்றுப்படி, பிரதமர் மக்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொண்ட ஐந்து சபதங்களுக்கு இசைவாக தேசிய உணர்வுடன் சீரமைக்க இந்த மரபு நடைமுறைகளை மறுபரிசீலனை செய்கிறோம். காலனித்துவ கால பெயர்கள் மற்றும் நடவடிக்கைகளை மாற்றி இந்திய முறைப்படி வைக்க வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் தான் இவை என்று தெரிவித்துள்ளது.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Army, BRITISH RULE

அடுத்த செய்தி