முகப்பு /செய்தி /இந்தியா / புத்தாண்டு: இந்திய - சீன ராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்!

புத்தாண்டு: இந்திய - சீன ராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்!

புத்தாண்டையொட்டி எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

புத்தாண்டையொட்டி எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

புத்தாண்டையொட்டி எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்கள் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அந்த வகையில், எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இனிப்பு பரிமாறிக்கொண்டனர்.

மலைப்பகுதிகளில் உள்ள நாதுலா மற்றும் கொங்க்ரா லா, சிக்கிம், லடாக், அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில், கொரோனா முன்னெச்சரிக்கையாக முழு உடல் கவசங்களை அணிந்து, இருநாட்டு வீரர்களும், வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டு, இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர்.

இதேபோன்று, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் மெந்தார் எல்லைப்பகுதியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

இதையும் படிங்க: கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு.. ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி!

நல்லெண்ண அடிப்படையில் இருநாட்டு ராணுவ வீரர்களும் இனிப்புகளையும், வாழ்த்துகளையும் பரிமாறி கொண்டதாக ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில் “2022-ம் ஆண்டின் தொடக்கத்தில், பரஸ்பர நம்பிக்கை மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்காக, இந்திய ராணுவம் பூஞ்ச் மற்றும் மெந்தார் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துடன் இனிப்புகள் மற்றும் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டது” என கூறினார்.

மேலும் அவர் “எல்லையில் தற்போது அமலில் உள்ள போர் நிறுத்தத்தை கருத்தில் கொண்டு, யூனியன் பிரதேசத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Also Read : Omicron| டெல்டாவையும் மிஞ்சி விட்டது ஓமைக்ரான், பாதிப்பு கடுமையாக இருக்கும்- டாக்டர் ஃபாசி எச்சரிக்கை

First published:

Tags: China, India, India and Pakistan