"பரம் விர் சக்ரா" விருதுக்கு அபிநந்தன் பெயர் பரிந்துரை!

விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.

news18
Updated: April 20, 2019, 9:46 PM IST
அபிநந்தன்
news18
Updated: April 20, 2019, 9:46 PM IST
பாகிஸ்தான் நாட்டில் பிடிபட்டு, பின்னர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட விமானப் படை கமாண்டர் அபிநந்தன் பாதுகாப்பு காரணங்களுக்காக ஸ்ரீநகரில் இருந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய எல்லைக்குள் புகுந்த பாகிஸ்தான் விமானப்படைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்தது.

சிறைபிடிக்கப்பட்ட அபிநந்தனை நல்லெண்ண அடிப்படையில் பாகிஸ்தான் அரசு இந்தியாவிடம் ஒப்படைத்தது. இந்தியா திரும்பிய அபிநந்தனுக்கு, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைகள் செய்யப்பட்டது. அந்தப் பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு ஒருமாதம் விடுமுறை அளிக்கப்பட்டது.


விடுமுறை காலம் முடிவதற்கு முன்னதாகவே முழுமையான உடல்தகுதியை பெற்ற அபிநந்தன் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் பணியில் சேர்ந்தார்.

இந்நிலையில், அவரது பாதுகாப்பை முன்வைத்து ஸ்ரீநகரில் இருந்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள முக்கிய விமானப்படை தளத்தில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், போர் காலங்களில் வீரதீர சாகசங்கள் புரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் ‘பரம் விர் சக்ரா’ விருது வழங்கப்படும். தற்போது, அபிநந்தன் பெயரை, பரம் விர் சக்ரா விருது வழங்குவதற்கு பரிந்துரைக்க இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது.

Loading...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...