இந்திய விமானப்படை தினத்தையொட்டி மெய்சிலிர்க்கும் சாகசம் நடத்திய போர் விமானங்கள்.. (படங்கள்)

இந்திய விமானப்படை தினத்தையொட்டி மெய்சிலிர்க்கும் சாகசம் நடத்திய போர் விமானங்கள்.. (படங்கள்)

இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி உத்தரபிரதேசத்தில் விமானப்படை வீரர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் சாகச ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய விமானப்படை தினத்தை ஒட்டி உத்தரபிரதேசத்தில் விமானப்படை வீரர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் சாகச ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளனர்.

  • Share this:
இந்திய விமானப்படை தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 8-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுடன் நடந்து வந்த இந்நிகழ்ச்சி இந்தாண்டு கொரோனா காரணமாக பார்வையாளர்களின்றி நடைபெற உள்ளது. இதனையொட்டி உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படைதளத்தில் , விமானப்படைக்கு சொந்தமான ரஃபேல், சின்னூக், மற்றும் தேஜஸ் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.  மேலும் போர்விமானங்கள் ஆகாயத்தில் பறந்தபடி வாணவேடிக்கை நிகழ்த்தும் பொடிகளை வெளியேற்றி வர்ணஜாலம் நிகழ்த்தின.

இந்தியவிமானப்படையில் புதிதாக இணைந்துள்ள ரஃபேல் விமானங்களும் ஒத்திகை நிகழ்ச்சிக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளன. ஆகாஷ் கங்கா பாராகிளைடிங் வீரர்களும் கண்கவர் ஒத்திகை நிகழ்ச்சியில் ஈடுபட்டனர். அந்தரத்தில் அவர்கள் பறந்து கீழே இறங்கிய காட்சி காண்போரை வியக்க வைத்தன.
Published by:Vaijayanthi S
First published: