Home /News /national /

எல்லை தாண்டவும் இந்தியா தயங்காது - தீவிரவாதிகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

எல்லை தாண்டவும் இந்தியா தயங்காது - தீவிரவாதிகளுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்

நாட்டின் கிழக்கு எல்லை பகுதியில் ஊடுருவல்காரர்கள் பிரச்னை அதிகம் காணப்பட்டது. அவற்றை மத்திய அரசு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என ராஜ்நாத் சிங் பேசினார்.

    எல்லை தாண்டிய தீவிரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்து கொள்ளாது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

    1971-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் பங்கேற்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் கவுகாத்தி நகரில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது-

    இந்தியா முழுவதும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த காலங்களில் மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடடிவக்கைகள் காரணமாக தீவிரவாத செயல்பாடுகள் குறைந்து வருகின்றன.

    இதையும் படிங்க -  அமித்ஷா வருகை.. ஆட்சி மாற்றம் நிகழுமா? புதுச்சேரி அரசியலில் பரபரப்பு!

    தனது அதிரடி நடடிவக்கை மூலம் நாட்டில் அமைதியை சீர்குலைப்பவர்களுக்கு மத்திய அரசு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. உள்நாட்டைப் போன்றே எல்லை தாண்டிய தீவிரவாதத்தையும் இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது.

    மேற்கு எல்லையைப் போன்றே, நாட்டின் கிழக்கு எல்லை பகுதியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அமைதி நிலவுகிறது. நாட்டின் கிழக்கு எல்லை பகுதியில் ஊடுருவல்காரர்கள் பிரச்னை அதிகம் காணப்பட்டது. அவற்றை மத்திய அரசு முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டது.

    இதையும் படிங்க - ஜம்மு காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி - பாதுகாப்பு ஏற்பாடு குறித்து NIA தலைவர் ஆய்வு

    வடகிழக்கு மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் பெரும்பாலான இடங்களில் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் உள்ளன. அங்கு நிலைமை சீரடைவதற்கு ஏற்ப கடுமையான சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
    Published by:Musthak
    First published:

    Tags: Rajnath singh

    அடுத்த செய்தி