இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு - கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த முடியுமா?

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு - கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த முடியுமா?

கொரோனா வைரஸ்

தனிப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப்பெரிய தாக்கம் என்று கூறுவதற்கு காரணம், இந்த தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு மிகச்சிறிய பிரச்சனைகளை நாம் அன்றாடம் எதிர்கொண்டுதான் இருந்தோம்.

  • Share this:
கொரோனா முதல் அலை ஏறத்தாழ இந்தியாவில் குறையத்தொடங்கியுள்ள நிலையில், தனிமனித சுகாதாரம் முறையாக கடைபிடிக்கப்பட்டால் 2வது அலையையும் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்றளவும் உயிர்ப்புடன் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் கடுமையான ஊரடங்கு மற்றும் சுகாதார நடவடிக்கைகளால் தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருக்கிறது. பாதிப்படைபவர்கள் விகிதமும், இறப்பு விகிதமும் எண்ணிக்கை அடிப்படையில் குறையத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருவதற்கு இதுவே நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. தற்போது கொரோனா தடுப்பூசியும் நடைமுறைக்கு வந்துள்ளதால், லட்சக்கணக்கானோர் மனதில் இருந்த பயமும் அகலத் தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ்


தனிப்பட்ட ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கொரோனா வைரஸ் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மிகப்பெரிய தாக்கம் என்று கூறுவதற்கு காரணம், இந்த தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு மிகச்சிறிய பிரச்சனைகளை நாம் அன்றாடம் எதிர்கொண்டுதான் இருந்தோம். மனித சமூகம் எதிர்கொள்கின்ற இத்தகைய எதிர்பாராத பிரச்சனைகள் குறித்து மத குரு கிருஷ்ணமூர்த்தி ஏற்கனவே தன்னுடைய போதனைகள் மூலம் விளக்கியிருக்கிறார். அவர் கூற்றின்படி, சிறிய பிரச்சனைகளும், போராட்டங்களும் நம் வாழ்வின் மிகப்பெரிய பகுதியை எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பிரச்சனைகளை எதிர்கொள்ளாத மனிதன் வளர்வதில்லை என்றும், அவர் சரியாக செயல்படவில்லை என்பதையும் உணர்த்துவதாக கூறியுள்ளார். சோதனைகளும், சிக்கல்களும் மனிதனை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அழைத்துச் செல்பவை எனவும் மத குரு கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுப்படி பார்க்கும்போது, இந்த கொரோனா வைரஸ் நம்மை சிக்கல்களுக்கு இடையே அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றிருக்கிறது எனக் கூறலாம். நெருக்கடியான சூழலில் ஏற்படும் சவால்களை சந்திக்க நாம் எவ்வாறு தயாராக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்திருக்கிறது. பொதுவாக நெருக்கடிகள் வெளியில் இருந்து நமக்கு வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்,

உண்மையாக அதனை அலசி பார்த்தால் நெருக்கடிகள் நமக்குள்ளேயே இருக்கின்றன. அவை நெருக்கடியாக மாறுவதும் அல்லது இயல்பான விஷயமாக இருப்பதும் நம்முடைய செயல்பாட்டை பொறுத்து அமைகின்றன என அவர் தெரிவித்துள்ளார். 20ஆம் நூற்றாண்டைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பிரச்சனைகளும், சோதனைகளும் நிறைந்த காலகட்டமாக இருந்துள்ளது. 2 உலகப்போர்களில் 110 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். ஸ்பானிஷ் ப்ளூ மிகப்பெரிய உயிர்கொல்லி நோயாக பரவியது. தீவிரவாத தாக்குதல்கள், பொருளாதார பிரச்சனைகள் என சொல்லிக்கொண்டே போகலாம்.

அத்தனை பிரச்சனைகளுக்கும் மூலக் காரணத்தை கண்டறிவதை மட்டும் மனிதகுலம் தவறிவிடுகிறது. தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனின் செயல்பாடும் இந்த பிரச்சனைகளுக்கு மூலக் காரணமாக இருப்பதாக மத குரு கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார். அவரின் கூற்றுப்படி, பேரழிவு என்பது ஏதோவொரு சந்தர்ப்பத்தினால் நிகழ்பவை அல்ல எனத் தெரிவிக்கிறார். மனிதர்களிடையே இருக்கும் பொறாமை, ஆர்வம், பேராசை, ஆதிக்கத்திற்காக ஏங்குதல், போட்டி மற்றும் இரக்கமற்ற தன்மை ஆகியவற்றால் அன்றாடம் நடவடிக்கைகளில் இருந்து இந்த பேரழிவுகள் உருவாவதாக தெரிவிக்கிறார்.

மனிதகுலம் ஒரே ஒரு பேரழிவில் மாறிவிடுமா என்றால் அதற்கான விடை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அது ஒவ்வொரு தனிமனிதனின் சுயசிந்தனையை பொறுத்ததாக இருக்கிறது. சமூகம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ? அதற்கு ஏற்ப நாம் நம் வாழ்வியல் நடைமுறைகளை அமைத்து வாழ வேண்டும். அப்போது மட்டுமே சமூகமாற்றத்தை பொதுவெளியில் காண முடியும் எனவும் மத குரு கிருஷ்ணமூர்த்தி தெரிவிக்கிறார். அவரது போதனைகள் நிகழ்கால நடைமுறைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, கொரோனா 2வது அலையை வெற்றிகரமாக எதிர்கொள்ள நினைத்தால் தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனும் சுகாதார முறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
Published by:Arun
First published: