ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவில் 2வது நாளாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் 2வது நாளாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் அதிகரிக்கும் தினசரி கோவிட் பாதிப்பு

இந்தியாவில் அதிகரிக்கும் தினசரி கோவிட் பாதிப்பு

டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா,கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தின் படி, கடந்த ஒரு நாளில் புதிதாக 8,582 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 22 ஆயிரத்து 017 ஆக உயர்ந்துள்ளது.

  அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்றும் 2.71 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 16 ஆயிரத்து 179 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. கடந்த ஒரே நாளில் 4 உயிரிழப்புகள் பதிவான நிலையில் நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 761 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 8,329 ஆக இருந்த நிலையில், இன்று அந்த எண்ணிக்கையில் 200 மேல் அதிகரித்து 8,582ஆக உள்ளது.

  குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கர்நாடகா,கேரளா ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது. மகாராஷ்டிராவில் தினசரி கோவிட் பாதிப்பு 2.922 ஆக பதிவாகியுள்ளது.  மாகாரஷ்டிராவில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 14,858 ஆக உள்ளது.

  அதற்கு அடுத்தபடியாக கேரளாவில் 14,518 பேருக்கு கோவிட் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கர்நாடகாவில் புதிதாக 562 பேருக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இவற்றில் 545 பாதிப்புக்கள் பெங்களூரு நகரில் மட்டும் பதிவாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திலும் நீண்ட நாள்களுக்குப் பின்னர் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது.

  இதையும் படிங்க: உ.பியில் கலவரக்காரர்களுக்கு சொந்தமான இடங்களில் புல்டோசர் நடவடிக்கை.. ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் அடுத்து சனிக்கிழமை வரும் என எச்சரிக்கை

  நாட்டில் சிறார்கள் மற்றும் வயது வந்தோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டப்பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஒரே நாளில் 13 லட்சத்து நாலாயிரத்து 427 பேருக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.இதுவரை ஒட்டுமொத்தமாக 195.07 கோடி டோஸ் தடுப்பூசிகள் நாட்டில் செலுத்தப்பட்டுள்ளன.

  Published by:Kannan V
  First published:

  Tags: Corona, Covid-19